வல்லெழுத்து வர அதற்குரிய மகர ஒற்று மிக்கதோ, நிலைமொழி மகரம் கெடாது நின்றதோ என்னும் ஐயம் நீங்க மகரம் கெடாது நிற்கும் என்பார் ‘‘நிலையலும் உரித்தே’’ என்றார். |
மகரஈறு அல்வழிக்கண்ணும் துவரக்கெடும் (சூ-310) என்பது அல்வழி யெல்லாம் (சூ - 314) என்னும் சூத்திரத்துள் ‘எல்லாம்’ என்பதனாற் கொள்ளப்பட்டதாகலின் அவ்விதி இதற்கு எய்தாமைப் பொருட்டு நிலையலும் உரித்தே என்றார். அவ்எச்ச உம்மையான் வல்லெழுத்து மிகாமையும் கொள்ள வைத்தார். |
“இலம்பாடு” என்பது ஒரு மொழியாக நிற்கும் உரிச்சொல். பாடு என்பது விகுதி. இலம்படு என்பது இலம்+படு எனப்புணர்ந்து நிற்கும் இரண்டு சொல். படு என்பது முதனிலைத் தொழிற்சொல். படுதல் என்பது உண்டாதல், தோன்றுதல், உறுதல், அடைதல், மறைதல், கெடுதல் எனப் பொருள் தரும் பல பொருளொருசொல். |
இலம்படு புலவர் என்பதற்கு வறுமைப்பட்ட அல்லது வறுமைப்படும் புலவர் என்பது பொருள். இதனைப் புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் (புறம்-155) உரையான் அறிக. படுபுலவர் என்பது வினைத்தொகை. |
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இலம்படு புலவர் என்னும் தொடருக்குப் பொருள் காண்பதில் முரண்பட்டு நின்றனரேயன்றி இப்புணர்ச்சி விதி கூறியதன் நோக்கம் பற்றியோ, இச்சொல்லின் அமைதி பற்றியோ ஓர்ந்துரைத்தாரல்லர். |
இலம்படு என்பது இன்மையானது உற்ற என அல்வழியாயும் இன்மையை உற்ற என வேற்றுமையாயும் பொருள் விரிதலின் இடம் நோக்கிப் பொருள் கொள்க. |
| சூ. 317 : | அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி |
| ஒத்த எண்ணு முன்வரு காலை |
(22) |
க-து :. | மகர ஈற்று எண்ணுப் பெயர்க்காவதொருவிதி கூறுகின்றது |
| |
பொருள் :ஆயிரம் என்னும் சொல்லின் இறுதி, இயைவதற்கொத்த எண்ணுப்பெயர் வருமிடத்து அத்துச்சாரியையொடு பொருந்திப் புணரும். |
எ.டு: ஆயிரத்தொன்று - ஆயிரத்துமூன்று - ஆயிரத்துப்பத்து, ஆயிரத்துநூறு எனவரும். இவை உம்மைத் தொகை. |