நூன்மரபு275

எ.டு :வேற்றுமைக்கண்:  எல்லாநங்கையும், செவியும், தலையும், புறமும்
எனவரும்.  கை   முதலியவை   உயர்திணை  உறுப்புக்கள்   என்பதனை
நம்முச்சாரியை  தெளிவுபடுத்தி  நின்றது. ஏனைக்  கணங்களொடும் ஒட்டிக்
கொள்க.
 

இனி அல்வழிக்கண்: எல்லாக் குறியேமும் எல்லாச் சிறியேமும், எல்லாத்
தீயேமும்,  எல்லாப்  பெரியேமும்  என   வரும். ஏனைக் கணங்களொடும்
ஒட்டுக.   ‘எல்லாம்’     எனும்     பொதுப்பெயர்     உயர்திணைக்கண்
தன்மையிடத்தல்லது   ஏனையிடத்து   வாராது   என்பது    பெயரியலுட்
பெறப்படும்.
 

சூ. 325 :

நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே (30)
 

க-து :

மகர ஈற்று முன்னிலைப் பன்மைப்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :சாரியை  அல்லாத,  நும்  என்னும்  பெயர் மெல்லெழுத்து
மிக்குப் புணரும்.
 

எ. டு:நுங்கை,  நுஞ்செவி,  நுந்தலை,  நும்புறம்  எனவரும்.  ஏனைக்
கணங்கள்வரின் மேலானவற்றொடு ஒக்கும்.
 

நும்  எனும்  பெயர்  என்னாது,  ஒருபெயர்  என்றதன்  கருத்தாவது:-
மொழிகளின் தோற்றத்திற்கு அடிப்படை, மாந்தரின்  உணர்ச்சியாம் என்பது
மொழியாய்வாளர்     முடிபாகும்.     தமிழ்மொழிக்கண்    மூவிடங்களை
உணர்த்திவரும் அடிப்படை எழுத்துக்கள்;  உயிருள் அ,இ,உ என்பவையும்,
ஒற்றுள் த,ஞ,ந என்பவையுமாம்.
 

அவற்றுள்      படர்க்கைக்குரியவாக    அ,    த      என்பவையும்
முன்னிலைக்குரியவாக   உ,  ந  என்பவையும்  தன்மைக்குரியவாக  இ, ஞ
என்பவையும் அமைந்துள்ளமை காணலாம்.
 

இவற்றினின்றே   சுட்டுப்   பெயர்களும்,   கிளைநுதற்   பெயர்களும்,
இடங்காட்டும்  விகுதிகளும்  அமைந்துள்ளன  என்பதை அ, இ, உ, ஆன்,
ஈன், ஊன், அன், இன், உன் என வருதலான் காணலாம்.
 

அங்ஙனம்   தன்மைக்குரியவாக   நின்ற  இ, ஞ   என்பவை    ஒலி
ஒற்றுமையுடைய எகரமாகவும் யகரமாகவும் திரிந்தமைந்தன.
 

அம்மரபானே தாம், தம், தான், தன்  எனப்படர்க்கையும், ஞேம், ஞெம்,
(யேம், யெம்) ஏம், எம் (யேன், யென்) ஏன், என்  எனத் தன்மையும்; நூம்,
நும்,  நூன்,  நுன்,  உம், உன்  என  முன்னிலையும்   அமைந்துள்ளமை
புலனாகும்.