பின், முன் என்பவை காலப் பொருளவாய் நிற்குங்கால் பின்கொள்வான், முன்கொண்டான் என இயல்பாதலைப் புறனடையாற் கொள்க. ஊன் என்னும் சுட்டுப் பெயர் திரியாமையான் விலக்கப்பட்டது. |
சூ. 334 : | சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் |
| அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப |
(39) |
க - து : | இடங்குறித்து வரும் வயின் என்னும் சொல்லும் ஈறுதிரியு மென்கின்றது. |
பொருள் : சுட்டெழுத்துக்களை முதலாகக் கொண்டு நிகழும் வயின் என்னும் சொல்லீறும், எகரத்தை முதலாகக் கொண்டு நிகழும் வயின் என்னும் சொல்லீறும் மேற்கூறிய தன்மையவாய் வல்லெழுத்தியையின் றகரமாகத் திரியும் இயல்பின எனக் கூறுவர் ஆசிரியர். இச்சொல் பெரும்பான்மை சுட்டினையும் எகரத்தையும் முதலாகக் கொண்டல்லது வாராமையின் சுட்டு முதல் வயினும், எகர முதல் வயினும் என்றார். |
எ. டு: அவ்வயிற்கண்டான், இவ்வயிற்கண்டான், உவ்வயிற்கண்டான்; எவ்வயிற்கண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். ‘இயற்கைய’ என்றதனான் ‘வயின் வயிற்பற்றி’ என அடுக்கிவந்து இவ்விதி பெறுதலும் கொள்க. |
உரையாசிரியன்மார் இஃது இயல்பாயும் நிற்குமென்பார். அது சான்றோர் வழக்காயின் மேற்கூறிய மிகையாற் கொள்க. |
சூ. 335 : | குயினென் கிளவி இயற்கை யாகும் |
(40) |
க - து : | குயின் என்னும் சொற்கு எய்தியது விலக்குகின்றது. |
பொருள் : குயின் என்னும் பல பொருளொரு சொல் வல்லெழுத்தியையின் திரியாது இயல்பாகும். |
எ. டு: குயின், குழாம், செலவு, தோற்றம், பறைவு எனவரும் (குயின்-வெண்முகில்) குயின் குறுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். (குயின்-குயிலுதல்-துளைத்தல் என்னும் தொழிற்பெயர்). |
ஒரு சிறுகுறிப்பு : இந்நூற்பாவினை அடுத்துத் ‘‘தொழிற் பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல’’ என்றொரு நூற்பா இருந்து கெட்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகின்றது. என்னை? |
முன்னர் ஞ ந ண ம என்னும் ஈறுகட்கும் பின்னர் ல ள என்னும் ஈறுகட்கும் தொழிற்பெயர் விதி விதந்து கூறப்பட்டிருத்த |