நூன்மரபு282

லானும்    ‘மின்னும்     பின்னும்    பன்னும் ...... தொழிற்பெய    ரியல’
(சூ. 345.)  என   இவற்றை    இவ்வீற்றுத்   தொழிற்பெயர்   விதியொடு
மாட்டேற்றிக்   கூறுதலானும்,  தின்,  துன்,  முன்,  பின் என முதனிலைத்
தொழிற் பெயர்கள் பல உளவாகலானும் என்க.
 

சூ. 336 :

எகின்மர மாயின் ஆண்மர இயற்றே
(41)
 

க - து :

னகர ஈற்று மரப்பெயர் ஒன்றற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :எகின் என்னும் சொல் மரப்பெயராகவரின்  ஆண் என்னும்
மரப்பெயரியல்பிற்றாய் அம்முச்சாரியை பெற்று வரும்.
 

எ.டு :எகினங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.
 

சூ. 337 :

ஏனை எகினே அகரம் வருமே

வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும்
(42)
 

க - து :

எகின் என்னும் பறவைப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :மரமல்லாத, பறவையை உணர்த்தும் எகின் என்னும் சொற்கு
அகரச்சாரியை வரும். வல்லெழுத்து இலக்கணம் மிகுதல்வேண்டும்.
 

எ.டு :  எகினக்கால், செவி,  தலை,  புறம் எனவரும். ஏனைக்கணங்கள்
இயல்பாக  வரும்.  எ.டு : எகின  ஞாற்சி,  நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை,
அழகு எனவரும்.
 

‘இயற்கை’  என்றதனான் மெல்லெழுத்து  மிகுதல்   கொள்க  என்பார்
உரையாசிரியர்.  மெல்லெழுத்துமிகின்  அஃது  அம்முச்சாரியை  எனற்கும்
ஏற்குமாகலின் ஒவ்வாதென்க.
 

சூ. 338 : 

கிளைப்பெய ரெல்லாம் கிளைப்பெய ரியல
(43)
 

க - து :

னகர  ஈற்றுக் கிளைப்பெயர்கட்கு  மாட்டேற்று முகத்தான் விதி
கூறுகின்றது.
 

பொருள் :   னகர   ஈற்றுக்  கிளைப்பெயரெல்லாம்  ணகர   ஈற்றுக்
கிளைப்பெயரியல்பினவாய்க் கொளத்திரிபின்றி இயல்பாகும்.
 

எ. டு:  எயின்குடி,  சேரி,  தோட்டம் எனவரும். ‘‘கொளத்திரிபிலவே’’
என்றதனான் எயினக்கன்னி,  எயினப்பிள்ளை என அக்கும் வல்லெழுத்தும்
பெற்று வருதலும், பார்ப்பனச்சேரி என ஈற்றயல் குறுகி அவ்வாறு வருதலும்,
கொல்லச்சேரி என ஈறு கெட்டு அவ்வாறு வருதலும், எயின ஞாற்சி, வாழ்வு
என ஏனைக் கணத்து அக்குப்பெற்று இயல்பாக வருதலும் கொள்க.