அஃதாவது தான் என்பது நெடுமுதல் குறுகியும், யான் என்பது ஆகாரம் எகரமாய் யகரமெய் கெட்டும், நிற்கும் என்றவாறு. |
எ. டு: தன்கை; என்கை, செவி, தலை, புறம் எனவரும். ஞாண், நூல், மணி, வட்டு, அணி என்பனவற்றொடும் கூட்டிக் கண்டுகொள்க. |
சூ. 353 : | வேற்றுமை யல்வழிக் குறுகலும் திரிதலும் |
| தோற்ற மில்லை என்மனார் புலவர் |
(58) |
க-து : | மேற்கூறிய தான்யான் என்பவை அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : அதிகாரத்தான் நிற்கும் தான்யான் என்னும் பெயர்கள் அல்வழியாற் புணருமிடத்து நெடுமுதல் குறுகலும் திரிதலுமின்றி இயல்பாகப் புணரும். |
எ. டு:தான் குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும் யான் குறியேன், சிறியேன், தீயேன், பெரியேன் எனவும் வரும். |
‘தோற்றம்’ என்றதனான் - வேற்றுமைக்கண் தற்புகழ், எற்புகழ் என னகரந் திரிதலும் கொள்க என்பார் உரையாளர். மாட்டேறு முதனிற்கும் எழுத்துப் பற்றியதாகலின் னகரத் திரிபு பொதுவிதியாற் பெறப்படுமென்க. |
சூ. 354 : | அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே |
(59) |
க-து : | அழன் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : அழன் என்னும் சொல்லிறுதி னகரஒற்றுக்கெட வருமொழி வல்லெழுத்துமிக்குப் புணரும். |
எ.டு :அழக்குடம், சாடி, தூதை, பானை எனவரும். உருபுபுணர்ச்சிக்கு ஓதியாங்கு அத்துச்சாரியை பெறுமோ என வரும் ஐயம் நீங்க வல்லெழுத்துமிகும் என்றார். |
சூ. 355 : | முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் |
| இல்லென் கிளவிமிசை றகரம் ஒற்றல் |
| தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே |
(60) |
க-து : | முன்றில் என்னும் சொல் இலக்கணமரூஉவாய் வருமென்கின்றது. |
பொருள் : முன் என்னும் சொற்கு முன்னர்வரும் இல் என்னும் சொல்லுக்கு மேல் ஒரு றகர ஒற்றுத் தோன்றி நிற்றல் பழைய இயல்பினை உடைய வழக்கின்கண் மருவி வந்த மரபாகும். |