நூன்மரபு295

எ. டு:கல் + தீது = கஃறீது, அஃறிணை எனவரும்.
 

வருமொழித்திரிபு தொகைமரபினுட் பெறப்படும் (தொகை-8) பஃறாழிசை,
பஃறொடை என விதியீறாகி நின்ற லகரத்திற்கும் இவ்விதி ஒக்கும். ஏற்புழிக்
கோடல்  என்பதனான்  இத்திரிபு குறில் வழிநின்ற லகரத்திற்கேயாகும் என
அறிக.
 

சூ. 370 :

நெடியதன் இறுதி இயல்புமா ருளவே
(75)
 

க-து :

ஒருசார் லகர ஈற்றுச் சொற்கள் இயல்பாகும் என்கின்றது.
 

பொருள் :  நெட்டெழுத்தின்  பின்நின்ற  லகர   இறுதிச்   சொற்கள்
திரிபின்றி இயல்பாதலும் உளவாம்.
 

எ. டு:   கால்குறிது,  பால்சிறிது,  நூல்பெரிது எனவும் புலால் கொடிது,
வரால்  பெரிது   எனவும்  வரும். தகரம்  வருவழி, வராறீது, வேறீது என
லகரம் கெடுதல்  தொகைமரபினுள்  (தொகை-78) பெறப்படும். உம்மையான்
திரிந்து வருவன உளவேல் கண்டு கொள்க. மேற்கோள், மேற்பார்வை எனக்
காட்டலுமாம்.
 

சூ. 371 :

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்

அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல

(76)
 

க-து :

ஒருசார்     லகர     ஈற்றுப்     பெயர்கள்   அல்வழியினும்
திரியுமென்கின்றது.
 

பொருள் : நெல்,  செல், கொல், சொல் என்னும் நான்கு பெயர்களும்,
அல்வழியாற், சொல்லுமிடத்தும் வேற்றுமைக்கு ஓதிய இயல்பினவாய் லகரம்
றகரமாகத் திரியும்.
 

எ. டு:   நெற்குவிந்தது  -  செற்கிளர்ந்தது;  கொற்கடிது - சொற்கடிது,
சிறிது,   தீது,   பெரிது   என   ஒட்டிக்   கொள்க.    (செல்  - மேகம்;
கொல்-கொல்லத்தொழில்; சொல்-மொழி, நெல்)
 

சூ. 372 :

இல்லென் கிளவி இன்மை செப்பின்

வல்லெழுத்து மிகுதலும் ஐஇடை வருதலும்

இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும்

கொளத்தகு மரபின் ஆகிடன் உடைத்தே

(77)
 

க-து :

இல் என்னும் பண்புரிச் சொற்காவதோர் மரபுணர்த்துகின்றது.
 

பொருள்:இல் என்னும் குறையுரிச்சொல், வினைக்குறிப்புப் பொருளை
உணர்த்தாமல் இன்மைப் பண்பை உணர்த்தி நிற்றற்கண், வல்லெழுத்துவரின்
மிகுதலும் ஐகாரச் சாரியை இடையே