10முன்னுரை

புள்ளிமெய்களையும், ஆய்தஎழுத்தினையும் வெளிப்படுத்தும். இம்  மூவகை
ஓசைகளுள்,  இசையும்  ஒலியும்  கலந்தும்  வரும்,  அஃகோசை தனித்தே
வரும்.  செவிப்புலனாகும்    இவ்வெழுத்துக்கள்  யாவும்  கண்டத்தினின்று
வெளிப்பட்டு மெய்ப்பாட்டுநிலையாற் புலனாகும்.
  

தமிழ்மொழிக்குரிய முப்பத்துமூன்று  எழுத்துக்களும்,  வெளிப்படுங்கால்,
தலையும்   மிடறும்     நெஞ்சும்     வளிஊன்றுமிடமாக     அமைந்து,
நெஞ்சுவளியிசையானும்  மிடற்றுவளியிசையானும்  மூக்கு  வளியிசையானும்
உருப்பெற்று வரும்.
  

இவ்வளியிசையை     வடிவுசெய்து      உருப்படுத்தும்   உறுப்புக்கள்
மிடற்றுக்குழல்,   மிடற்றுக்கு மேலுள்ள மூக்குக்குழல், அண்ணம், அண்பல்,
நா, இதழ் ஆகியவையாம் (பிறப்பியல்-1).
  

உந்திமுதலாக  எழும் வளியிசை   தலை,  மிடறு,  நெஞ்சு   என்னும்
மூன்றிடங்களில்    உணர்வழுத்தம்   பெற்று   யாவும்   கண்டத்தினின்று
வெளிப்படும். அங்ஙனம் வெளிப்படுங்கால்,  நாவும் இதழும் தடைசெய்யாது
நிற்பின், அவ்வோசை உயிர்ப்பிசையாய் உயிரெழுத்துக்களைப் பிறப்பிக்கும்;
நாவும்   இதழும்   பல்லும்   அண்ணமும்   செயற்பட்டுத்   தடைசெய்து
வெளிப்படுத்தின் அவ்வொலிகள் மெய்யெழுத்துக்களைப் பிறப்பிக்கும்.
  

உயிரெழுத்து:-  வாயுறுப்புக்களின் செயற்பாடின்றி அவை சமநிலையில்
நிற்க,    வாய்   அங்காப்ப,    மிடற்றெழுவளியிசையான்   வெளிப்படும்
உயிர்ப்பிசையே   அகரமென்னும்   அடிப்படையெழுத்தாகும்.   இவ்வகரம்
எல்லா    எழுத்துக்கட்கும்   மூலமாகவும்  துணையாகவும்   அகநிலையிற்
செயற்படும். அஃதாவது,  அகரவொலியின் திரிபுகளே பல்வேறு எழுத்தாகச்
செவிப்புலனாகும்.
  

அகரமாகிய  எழுத்தே, வாய்இதழ்களின்  கோணத்தானும் நாவிளிம்பின்
விரிவானும்  சுருக்கத்தானும் ஏனைப் பதினொரு  வகையாகிப் பன்னிரண்டு
உயிரெழுத்தாகத் திகழ்கின்றது.
  

உயிர்மெய் :- அங்ஙனம்   பன்னிரண்டுகோணங்களில்   வெளிவரும்
உயிர்ப்பிசையினை,  நாவானது அண்பல்லோடும் அண்ணத்தொடும் உற்றும்
உறழ்ந்தும்,  இதழானது பல்லொடும் இதழொடும் இயைந்தும், தடைப்படுத்தி
வெளிப்படுத்தும் நிலைமையான் வருவன உயிர்மெய்யெழுத்துக்களாகும்.
  

மெய் :-   நா   முதலிய   உறுப்புக்கள்   செயற்படும்   நிலைகளுள்
பதினொருநிலைகளை வரையறைசெய்து   அவற்றான்  வடிவு   கொள்ளும்
நிலையைத் தமிழ் நூலார் மெய்யென அமைத்துக்