58முன்னுரை

மற்றுத் தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் நாடி நிலத்தொடு முந்துநூல்   கண்டு  மயங்காமரபின்  எழுத்துமுறை  காட்டி  முறைப்படத் தொகுக்கப் பெற்ற இவ்இலக்கண நூலைக்  குறைவற்றதொரு  பனுவல்  என ஆய்ந்து  அறிந்து  கூற  அமர்ந்த  ஓர் ஆசிரியனுடைய கல்வியறிவையும், நூலறிவையும்   சுட்ட   வந்த  பனம்பாரனார்-தமிழ்  மொழிக்கும்   தமிழ் இலக்கணத்திற்கும் எவ்வாற்றானும் இயைபில்லாத வடமொழி நால்வேதத்தை முற்றக்கற்றவர் எனக் கூறிக் காட்டினார்  எனல்  பொருந்துமா? இடைச்சங்க காலத்திற்றோன்றி     இன்றளவும்      சிறப்புற்று    வழங்கி   வருகிறது இத்தொல்காப்பியம் என்பதை அறிஞர் பலர் ஒப்புகின்றனர். தொல்காப்பியர் நூல்  செய்த  காலத்து வடமொழி வேதம் நான்காகப் பகுக்கப்பட்டிருந்ததா,
பட்டிருப்பினும்  தமிழகத்தில்   பரவியிருந்ததா,   பரவியிருப்பினும்  தமிழ் அறிஞர்கள் அவற்றை விரும்பிக் கற்றுச் சிறந்திருந்தனரா,  சிறந்திருப்பினும் தமிழ்ப்      புலவர்        அச்சிறப்பொன்றையே   பாராட்டியிருப்பரா? தொல்காப்பியரின்  தமிழ் நூலாய்வுபற்றிய  அவர்    தமிழ்ப்   புலமையை விளக்கிக் கூறி,  அதன்பின் அவர்தம்  பல்கலைப்  புலமையைச்  சுட்டுதல் வேண்டி ஐந்திரம் நிறைந்த  தொல்காப்பியன் என விளக்கிய பனம்பாரனார்
அதங்கோட்டாசானின்   தமிழ்  நூலறிவை  மட்டும் உய்த்துணர வைத்தார் எனல்  ஏற்புடையதாகுமா?   ஆகாதெனின்   நான்மறை  என்றது  அறம்
பொருளின்பம்   வீடுபற்றிய  தமிழ்   மறைகளையே    எனக்கொள்வதில்
குறையின்றென்க.
  

அரில்தபத்தெரிந்து: குறைவறத்  தெரிவித்து   என்றவாறு. அஃதாவது
நடுவனாக, அமர்ந்து  ஆராயும்  அதங்கோட்டாசான்  இந்நூல்சுருக்கமாகச்
செய்யப்பெற்றதாகலின் எழுத்து முதலாய மரபெல்லாம் எஞ்சாமற்றொகுத்துக் கூறப்பெற்றுள்ளனவா  என்பதை   அவையிலுள்ளார்  அறிதற்  பொருட்டு இடையிடையே   எழுப்பிய   வினாக்களுக்குச்    சூத்திரத்தானும்,   நூல் உத்திவகையானும்,   அழகுவகையானும்,  மிகையானும்,  புறனடைகளானும், விதந்து கூறியவற்றொடு  விதவாதனவும்  இயைந்து  நிற்கும்  தன்மையைத்
தெரிவித்து    என்றவாறு.   (அரில்-குறை.   அரிதல்   குறைத்தலாகலின் அப்பொருட்டாயிற்று) தபுதல்-நீங்குதல். எனவே நிறைந்திருத்தலைக்  காட்டி என்பது   கருத்து.   தெரிந்து  என்பது  பிறவினைப்  பொருட்டு.  அன்றி மெலித்தல்    விகாரமெனினுமாம்.     இச்சொல்,   எழுத்துமுறை  காட்டி என்பதனோடு முடியும்.
  

இனி இதற்குப் பொருள், ‘‘கடாவறத் தெரிந்து’’ எனச் சுருங்கக் கூறினார் இளம்பூரணர். குற்றமற ஆராய்ந்துகூறி