இன்னும் இக்குறிப்புக்ளை அச்சிட்டு வெளிப்படுத்துமாறு பலமுறை ஊக்கப்படுத்தியவர்களும், அச்சிட்டபின் இக்குறிப்புக்களைப் படித்துப் பார்த்துச் சில திருத்தங் கூறி யுதவியவரும், சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களுக்கு மாணாக்கரும், பண்டிதருமாகிய 'வித்தக'ப் பத்திராதிபர், ச. கந்தையபிள்ளை அவர்களுக்கும் எமது பேரன்பு உரியதாகுக. | இவ் விளக்கவுரைக் குறிப்புக்களைப் பிழைகள் வாராவண்ணம் அச்சிடுதற்கு ஏற்றவாறு நன்கிதாக எழுதியும், உதாரண அகராதி, அரும்பதவிளக்கம் முதலியன என்னுமிவற்றை எழுதியும் உதவிய எமது மாணவர் சிறுப்பிட்டி, தி. சுப்பிர மணியபிள்ளைக்கும் எமது அன்பு உரியதாகுக. | இன்னும், தாமோதரம்பிள்ளை அவர்களது வரலாற்றுச் சுருக்கத்தை எழுதி உதவிய முதலியார் ஸ்ரீமாந் குல. சபாநாதன் அவர்களுக்கும் எமது நன்றி யுரியதாகுக. | இன்னும், நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு என்பவற்றையும், மேற்கோள் விளக்கம் ஆகியவற்றையும் எழுதி உதவிய மற்றும் மாணவர்களுக்கும் எமது அன்பு உரியதாகுக. | இன்னும், சுதம்பமுள நியாயம், வீசிதரங்க நியாயம் என்பவைகளை, தருக்கசங்கிரகத்தின் உரைக்குரையாகிய நீல கண்டீயத்தின் உரைகளை நோக்கி, விளக்கமுற எழுதி உதவிய சுன்னாகம் பிராசீன பாடசாலைச் சம்ஸ்கிருத வாசிரியரும், சம்ஸ்கிருத வித்துவானுமாகிய பிரமஸ்ரீ வி. சிதம்பரசாஸ்திரி யவர்களுக்கும் எமது வணக்கம் உரியதாகுக. | இன்னும் இக்குறிப்புக்களை யச்சிட்டு வெளிப்படுத்திய இந்நூற் பதிப்பாசிரியருக்கும் எமது பேரன்பு உரியதாகுக. | புன்னாலைக்கட்டுவன், தாது-தை-1. | சி. கணேசையர், |
|
|