புகர் புகழ் என்பனவற்றை நெட்டெழுத்தென்றே எவ்விடத்தும் ஆளாமையானும் நெட்டெழுத்தாகக் கூறிய இலக்கணத்தால் ஒரு பயன் கொள்ளாமையானுஞ் செய்யுளியலுள் இவற்றைக் குறிலிணை ஒற்றடுத்த நிரையசையாகவுந் தார்தாழ் என்பனவற்றை நெட்டெழுத்து ஒற்றடுத்த நேரசையாகவுங் கோடலானும் அது பொருளன்மை உணர்க. |
(17) |
51. | செய்யு ளிறுதிப் 1போலி மொழிவயி னகார மகார மீரொற் றாகும். |
|
இது செய்யுட்கண் ஈரொற்றிலக்கணமாமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : 2செய்யுட் போலி மொழி இறுதிவயின் - செய்யுட்கட் போலுமென்னுஞ் சொல்லின் இறுதிக்கண், னகாரம் மகாரம் ஈரொற்றாகும் - னகாரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும் என்றவாறு. |
உதாரணம் : 'அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்' 'சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தித் - திசையறி மீகானும் போன்ம்' (பரி - 10) எனவரும். போலும் என்னுஞ் செய்யுமென்னும் முற்று ஈற்றுமிசையுகரம் மெய்யொழித்துக் கெட்டு லகாரந் திரிந்துநின்றது. இஃது இறுதியில் முற்று. இடையிற் பெயரெச்சமாகிய உவமவுருபு. ஈண்டு முற்றென்பார் 3இறுதிமொழி என்றார். |
(18) |
|
இரண்டு மாத்திரையையுடைய நெட்டெழுத்துக்குக் கீழ் நின்றன போல ஈண்டுக் கொள்ளப்படு மியல்பை. இக் கருத்தை ஓராது புகர் புகர் என்பவற்றை நெட்டெழுத்து மொழியாக உரையாசிரியர் கொண்டாரென்று நச்சினார்க்கினியர் மறுத்தல் பொருந்தா தென்க. |
1. போலும் மொழிவயின் என்றும் பாடம். |
2. செய்யு ளிறுதிக்கண் போலும் என்னுஞ் சொல்லிக்கண் என்றிருப்பது நலம். |
3. பெயரெச்சம் பெயர்கொண்டன்றி நில்லாதாதலின் இறுதிச் சொல்லாய் நில்லாது; முற்றே இறுதிச் சொல்லாய் நிற்கும் என்பது கருத்து. |