உதாரணம் : ஐவனம் அய்வனம் எனவரும். மெய்பெற என்றதனான் அகரத்தின்பின்னர் உகரமேயன்றி வகரப் புள்ளியம் ஒளகாரம்போல வருமென்று கொள்க. ஒளவை அவ்வை எனவரும். |
(23) |
57. | ஓரள பாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான. |
|
இஃது அதிகாரத்தான் ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் எதிரது போற்றலென்பதனாற் செய்யுளியலைநோக்கி மாத்திரைச் சுருக்கங் கூறுகின்றது. |
இதன் பொருள் : மொழிவயினான - ஒரு சொல்லிடத்தே நின்ற ஐகார ஒளகாரங்கள், தேருங்காலை - ஆராயுமிடத்து, ஓரளபாகும் இடனுமாருண்டே - ஒரு மாத்திரையாய்நிற்கும் இடமும் உண்டு என்றவாறு. |
உம்மையான் இரண்டுமாத்திரை பெறுதலே வலியுடைத்தாயிற்று. இடனுமென்றது ஒருசொல்லின் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துக்குங் குறுகும், அது செய்யுட்கண் ஓசை இடர்ப்பட்டொலிக்குமிடத்துக் குறுகு மென்றற்கு. உரையிற் கோடல் என்பதானல் ஐகாரம் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துங் குறுகும், ஒளகாரம் முதற்கண் குறுகுமெனக் கொள்க. |
உதாரணம் : ஐப்பசி கைப்பை இடையன் குவளை எனவரும். 'அடைப்பையாய்கோறா' எனவும், 'புனையிளங்கொங்கையாய்வரும்' எனவும் பிறவாறும் வருவன செய்யுளியலுட் காண்க. ஒளவை கௌவை எனவரும். ஒளகாரம் 'கௌவை நீர்வேலி கூற்று' (வெண்பா - 23) எனத் தொடைநோக்கிக் குறுகினவாறுங் காண்க: தேருங்காலை யென்றதனான் ஓரெழுத் தொருமொழியுங் குறுகும். கை பை எனவரும். |
(24) |
58. | இகர யகர மிறுதி விரவும். |
|
இதுவும் போலி கூறுகின்றது. |