கும்மே - அது தான் தன்வினை பிறவினை யென்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம் என்றவாறு. |
உதாரணம்: தபு எனவரும். இது படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம். எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப் பண்ணெனப் பிறவினையாம். உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம். உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனையுயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பலபொருள் தருமென்றாராயிற்று. மறந்தப துப்பா என எச்சமாயும், நம்பி செம்பூ பே பெதும்பை எனப் பெயராயும், போ என ஏவலாயும் வரும். இவற்றைப் பிறசொற்களோடும் ஒட்டுக. ஏனை ஈகாரபகரம் இடக்கராய் வழங்கும். |
(43) |
77. | எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. |
| |
இது முன்னர் மொழிக்கு ஈறாமென்றவற்றுள் எஞ்சி நின்றன மொழிக்கு ஈறாமாறும் மொழிக்கு ஈறாகாவென்றவை தம்பெயர் கூறுங்கான் மொழிக்கு ஈறாமாறுங் கூறுகின்றது. |
இதன் பொருள்: எஞ்சியும் எஞ்சுதலில - 'கவவோடியையின்' (எழு - 70) என்னுஞ் சூத்திரத்தாற் பதினோருயிரும் பதினெட்டு மெய்க்கண்ணும்வந்து மொழிக்கு ஈறாமென்ற பொதுவிதியிற், பின்னை விசேடித்துக் கூறியவற்றை ஒழிந்தனவும் மொழிக்கு ஈறாகாதென்ற உயிர்மெய்களுந் தம்பெயர் கூறும் வழி ஈறாதற்கு ஒழிவில என்றவாறு. |
எல்லாமென்றது சொல்லினெச்சஞ் சொல்லியாங்குணர்த்த லென்னும் உத்தி. உம்மை விரிக்க. ஈண்டு எஞ்சியவென்றது முன்னர் உதாரணங்காட்டிய ஞகரமும் நகரமும் வகரமும் சகரமும் பகரமும் ஒருமொழிக்கும் ஈறாகாத ஙகரமும் ஒழிந்த பன்னிரண்டு மெய்க்கண்ணும் எகரமும் ஒகரமும் ஒளகாரமும் ஒழிந்த ஒன்பதுயிரும் ஏறி மொழிக்கு ஈறாய் வருவனவற்றை யென்று உணர்க. |
உதாரணம்: வருக புகா வீக்கி புகீ செகு புகூ ஈங்கே மங்கை எங்கோ எனவும், கட்ட கடா மடி மடீ மடு படூ படை |