மொழிமரபு97
எனவும்,  இதற்கு   ஏகார  ஓகாரங்கள்  ஏறி  வருவன  உளவேற்கொள்க,
மண்ணா எண்ணா கண்ணி  உணீ கணு நண்ணூ பண்ணை எனவும், இதற்கு
ஏகார ஓகாரங்கள் ஏறிவருவன உளவேற் கொள்க, அத புதா பதி வதீ அது
கைதூ  தந்தை  அந்தோ எனவும், இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற்
கொள்க, கம  நென்மா  அம்மி  மீ  செம்மு  கொண்மூ  யாமை  காத்தும்
வம்மோ எனவும், இதற்கு  ஏகாரம்  ஏறிவருவன  உளவேற் கொள்க, செய
காயா   கொய்யூ   ஐயை  ஐயோ  எனவும்,  இதற்கு  இகர  ஈகார  உகர
ஏகாரங்கள்  ஏறிவருவன  உளவேற் கொள்க, வர தாரா பரி குரீ கரு வெரூ
நாரை எனவும், இதற்கு ஏகார ஓகாரங்கள்  ஏறிவருவன உளவேற் கொள்க,
சில பலா வலி வலீ வலு கொல்லூ வல்லே கலை எனவும், இதற்கு  ஓகாரம்
ஏறி வருவன உளவேற் கொள்க, தொழ விழா நாழி வழீ மழு  எழூ தாழை
எனவும், இதற்கு  ஏகார  ஓகாரங்கள்  ஏறிவருவன உளவேற் கொள்க, உள
உள்ளா  வெள்ளி  குளீ  உளு  எள்ளூகளை   எனவும்,   இதற்கு  ஏகார
ஓகாரங்கள் ஏறிவருவன உளவேற் கொள்க, கற்ற கற்றா உறி உறீ மறு உறூ
கற்றை  எற்றோ  எனவும், இதற்கு ஏகாரம் ஏறிவருவன உளவேற் கொள்க,
நன  கனா  வன்னி  துனீ  முன்னு  துன்னூ  என்னே அன்னை அன்னோ
எனவும் வரும்.  இவற்றுட்  பெயராயும்  வினையாயும்   வருவன  உணர்க.
இவற்றுட் ககர  னகரங்கள்  விலக்காத   ஒன்பதும்   வந்தன.  ஆக  ஈறு
நூற்றுநாற்பத்துமூன்றும்     உதாரணமில்லாத      பதினெட்டும்    ஆக
நூற்றறுபத்தொன்று.       ஙகரம்         மொழிக்கு     ஈறாகாதென்பது
பெரும்பான்மையாதலிற்  கூறிற்றிலர்.  இனி  ஙகரமும்  ஒளகாரமும் ஏறாத
மெய்பதினைந்தும்  எகரமும்  ஒகரமும்  ஏகாரமும்   ஓகாரமும்  உகரமும்
ஊகாரமும்   ஏறாத    மெய்களுந்   தம்பெயர்   கூறுங்கான்   மொழிக்கு
ஈறாமாறு,  ஙப்பெரிது  சப்பெரிது  சௌஅழகிது  ஞௌதீது  என  வரும்.
ஏனைவற்றோடும்   இவ்வாறே    ஒட்டுக.    கெக்குறைந்தது   கொத்தீது
ஞெவ்வழகிது ஞொத்தீது நுந்நன்று நூப்பெரிது வுச்சிறிது  வூப்பெரிது  என
எல்லாவற்றையும்  இவ்வாறே   ஒட்டுக.   இன்னும்  எல்லாமென்றதனானே
கந்நன்று  ஆநன்று  என  மொழிக்கு  ஈறாவனவுந்  தம்பெயர்  கூறும்வழி
ஆமென்று கொள்க.
 

(44)