மொழிமரபு99

81.

வகரக் கிளவி நான்மொழி யீற்றது.
 

இதுவும் அது.
 

இதன்பொருள் : வகரக்கிளவி    நான்மொழியீற்றது   -   வகரமாகிய
எழுத்து நான்குமொழியின் ஈற்றதாம் என்றவாறு.
 

உதாரணம் : அவ்  இவ்  உவ்  தெவ் எனவரும். கிளவி ஆகுபெயர் ;
எழுத்துக் கிளவியாதற்கு உரித்தாமாதலின்.
 

(48)
 

82.

1மகரத்தொடர்மொழி மயங்குதல்வரைந்த
னகரத்தொடர்மொழி யொன்பஃ தென்ப
புகரறக் கிளந்த வஃறிணை மேன.

 

இதுவும் அது ; வரையறை கூறுதலின்.
 

இதன் பொருள்: புகரறக்   கிளந்த   அஃறிணை  மேன - குற்றமறச்
சொல்லப்பட்ட   அஃறிணைப்    பெயரிடத்து,    மகரத்   தொடர்மொழி
மயங்குதல் வரைந்த  னகரத்   தொடர்மொழி   ஒன்பஃது   என்ப - மகர
ஈற்றுத்  தொடர்மொழியோடு   மயங்காதென்று   வரையறைப்பட்ட  னகர
ஈற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 

ஆய்தம் விகாரம்.
 

உதாரணம் : எகின்  செகின் விழன்   பயின்  குயின்  அழன்  புழன
கடான்  வயான்  எனவரும்.  எகின்  எகினம்   என்றாற்போல  வேறோர்
பெயராய்த்   திரிவனவுஞ்      சந்தியாற்      திரிவனவுமாய்    ஈற்றுட்
திரிபுடையன  களைந்து  ஒன்பதும்  வரும்.  மேற்கண்டு  கொள்க.  நிலம்
நிலன் பிலம் பிலன்  கலம்  கலன்  வலம்  வலன்  உலம்  உலன்  குலம்
குலன்  கடம்  கடன்  பொலம்  பொலன்  புலம் புலன் நலம் நலன் குளம்
குளன் வளம் வளன் என இத்தொடக்கத்தன தம்முள் மயங்குவன.  வட்டம்
குட்டம் ஓடம் பாடம் இவைபோல்வன மயங்காதன.  வரையறை னகரத்தின்
மேற் செல்லும். மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம்.
 

(49)
 

மொழிமரபு முற்றிற்று.


1. இது  மொழியிறுதிப்போலி  கூறிற்று.  னகரத்தோடு   மகரம்  ஒத்து
நடவாது, மகரத்தோடு னகரம் ஒத்து நடக்குமென்பது கருத்து.