யான நாடி நெறிப்பட - அதனை அறிவான் ஆராய்ந்து அவற்றின் வழியிலே மனம்பட, திறப்படத் தெரியும் - அப் பிறப்பு வேறுபாடுகளெல்லாங் கூறுபட விளங்கும் என்றவாறு. |
1சொல்லுங்காலை வளி நிலைபெற்று உறுப்புக்களுற்று இங்ஙனம் அமைதலானே அவை வழங்குதலையுடைய; அவற்றின் வழக்கம் அவற்றின் வழியிலே மனந் திறப்படத் தெரியுமெனக் கூட்டி உரைத்துக்கொள்க. இ்ங்ஙனம் கூறவே 2முயற்சியும் முயலுங் கருத்தாவும் உண்மைபெற்றாம். |
(1) |
84. | அவ்வழி பன்னீ ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். |
|
இஃது உயிரெழுத்திற்குப் பொதுப்பிறவி கூறுகின்றது. |
இதன் பொருள்: பன்னீருயிருந் தந்நிலை திரியா - பன்னிரண்டு உயிருந் தத்தம் மாத்திரை திரியாவாய், அவ்வழிப் பிறந்த - அவ் வுந்தியிடத்துப் பிறந்த, மிடற்றுவளியின் இசைக்கும் - மிடற்றின்கண் நிலைபெற்ற காற்றான் ஒலிக்கும் என்றவாறு. |
எனவே குற்றியலிகரமுங் குற்றியலுகரமுந் தந்நிலை திரியுமென்றாராயிற்று. அவ் வெழுத்துக்களைக் கூறி உணர்க.
|
(2) |
85. | அவற்றுள் அ ஆ ஆயிரண் டங்காந் தியலும். |
|
இஃது அவ்வுயிர்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது. |
இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள், அ ஆ ஆயிரண்டு - அகர ஆகாரங்களாகிய |
|
1. சொல்லுங்காலை என்பதை எழுத்துக்களைக் கூறுபவனுடைய வினையாக்கி உரையாசிரியர் கூறுவர். அதுவே சிறந்த உரையாதல் காண்க. |
2. வளிதோன்றி நிலைபெற்று உறுப்புற்று அமைய என்றதனானே அங்ஙனம் அமைதற்கு உயிர்க்கிழவனது முயற்சியும் அவனும் வேண்டுமென்பது பெறப்படும். உயிர்க்கிழவன் - கருத்தா. |