நுனியை இரண்டிற்கும் கூட்டுக. ட ண என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(9) |
92. | அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின. |
|
இது மேலனவற்றிற்கோர் ஐயம் அகற்றியது. |
இதன் பொருள்: அவ்வாறெழுத்தும் மூவகைப் பிறப்பின - அக் கூறப்பட்ட ஆறெழுத்தும் மூவகையாகிய பிறப்பினை உடைய என்றவாறு. |
எனவே, அவை ககாரம் முதல்நாவினும் ஙகாரம் முதல் அண்ணத்தினும் பிறக்குமென்று இவ்வாறே 1நிரனிறை வகையான் அறுவகைப் பிறப்பின் அல்ல என்றார். |
(10) |
93. | அண்ண நண்ணிய பன்முதன் மருங்கி னாநுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். |
|
இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி கூறுகின்றது. |
இதன் பொருள்: அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில் - அண்ணத்தைச் சேர்ந்த பல்லினதடியாகிய இடத்தே, நா நுனி பரந்து மெய்யுற ஒற்ற - நாவினது நுனி பரந்து சென்று தன்வடிவு மிகவும் உறும்படி சேர, தகார நகாரந் தாம் இனிது பிறக்கும் - தகார நகாரம் என்றவை தாம் இனிதாகப் பிறக்கும் என்றவாறு. |
த ந என இவற்றின் வேறுபாடு உணர்க. முன்னர் உறுப்புற்று அமைய என்று கூறி, ஈண்டு 2மெய்யுற ஒற்ற என்றார். 3சிறிது ஒற்றவும் வருடவும் பிறப்பன உளவாகலின். |
(11) |
|
1. நிரனிறை வகையா னறுவகைப் பிறப்பின அல்ல என்றது, 'சகார ஞகார மிடைநா வண்ணம்' என்புழிச் சகர மிடைநாவிலும் ஞகர மிடையண்ணத்திலும் என்று நிரனிறையாகக் கொள்ள அறுவகைப் பிறப்பினவாம் ; அங்ஙனம் அல்ல என்றபடி. |
2. மெய்யுற ஒற்ற என்றது அழுந்த ஒற்ற என்றபடி. |
3. சிறிது ஒற்றப் பிறப்பன றகரம் னகரம் லகரம் என்பன. சிறிது வருடப் பிறப்பன ளகார ரகார ழகாரங்கள். |