வண்ணத்தை அந் நாத் தடவ ளகாரமாயும், இரண்டும் பிறக்கும் - இவ் விரண்டெழுத்தும் பிறக்கும் என்றவாறு. |
ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க. |
1இத்துணையும் நாவதிகாரங் கூறிற்று. |
(14) |
97. | இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - மேலிதழுங் கீழி தழுந் தம்மிற் கூடப் பகாரமும் மகாரமும் பிறக்கும் என்றவாறு. |
ப ம என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(15) |
98. | பல்லித ழியைய வகாரம் பிறக்கும். |
|
இது வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் - மேற் பல்லுங் கீழி தழுங் கூட வகாரமானது பிறக்கும் என்றவாறு. |
'வ என வரும். இதற்கு இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர் வைத்தார். |
(16) |
99. | அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். |
|
இது யகாரம் பிறக்குமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை - உந்தியிலெழுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை, அண்ணங் கண்ணுற்று அடைய - அண் |
|
1. இத்துணையும் நாவதிகாரம் கூறிற்றென்றது, அ - ம் சூத்திரத்தில் நாவிற் பிறக்கும் எழுத்தை அதிகாரப்பட வைத்து அது முதலாக நாவிற் பிறக்கும் எழுத்துக்களையே கூறிவந்தமையை. அதிகாரம் - தலைமை, முறைமை என்பர் நச்சினார்க்கினியர். |