108பிறப்பியல்

இயலும் - தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது  சிறப்புப்  பிறப்பிடத்தே
பிறத்தலோடு  பொருந்தி  நடக்கும், ஏனை  ஒத்த  காட்சியின்  இயலும் -
ஒழிந்த ஆய்தந் தமக்குப் பொருந்தின நெஞ்சுவளியாற் பிறக்கும் என்றவாறு.
 

காட்சி யென்றது  நெஞ்சினை.  கேண்மியா நாகு நுந்தை எனவும் எஃகு
எனவும் வரும்.
 

ஆய்தத்திற்குச் சார்பிடங் 'குறியதன் முன்னர்' (எழு - 38)  என்பதனாற்
கூறினார்.  இனி  ஆய்தந்   தலைவளியானும்  மிடற்றுவளியானும்  பிறக்கு
மென்பாரும்  உளர்.     மொழிந்த     பொருளோடொன்ற    வவ்வயின்
மொழியாததனை   முட்டின்று     முடித்தலென்பதனான்   அளபெடையும்
உயிர்மெய்யுந்   தம்மை   ஆக்கிய  எழுத்துக்களது பிறப்பிடமே  இடமாக
வருமென்று உணர்க.
 

(19)
 

102.

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரிறப நாடி
யளபிற் கோட லந்தணர் மறைத்தே
யஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு
மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே.

 

இஃது எழுத்துக்கடம் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்றது.
 

இதன் பொருள்: எல்லா வெழுத்துங் கிளந்து  வெளிப்பட - ஆசிரியன்
எல்லாவெழுத்துக்களும்     பிறக்குமாறு       முந்துநூற்கண்ணே    கூறி
வெளிப்படுக்கையினாலே, சொல்லிய பள்ளி பிறப்பொடு விடுவழி -  யானும்
அவ்வாறே  கூறிய  எண்வகை  நிலத்தும்  பிறக்கின்ற  பிறப்போடே அவ்
வெழுத்துக்களைக் கூறுமிடத்து, எழுதரு வளியின் உறழ்ச்சிவாரத்தின் அளபு
கோடல் - யான்  கூறியவாறு  அன்றி  உந்தியில்  தோன்றுங்   காற்றினது
திரிதருங்  கூற்றின்கண்ணே  மாத்திரை  கூறிக்  கோடலும்,  அகத்து எழு
வளியிசை  அரில்  தப  நாடிக்   கோடல்  -  மூலாதாரத்தில்  எழுகின்ற காற்றினோசையைக்