எனவே மொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளியிழந்து உயிரேறிநிற்கு மென்றாராயிற்று. இன்னும் ஈற்றுமெய் புள்ளிபெற்று நிற்குமென்றதனானே உயிர்முதன்மொழி தம்மேல் வந்தால் அவை உயிரேற இடங்கொடுத்து நிற்குமென்பதூஉங் கூறினாராயிற்று. இவ்விதி முற்கூறியதன்றோவெனின் ஆண்டுத் தனிமெய் பதினெட்டும் புள்ளி பெற்று நிற்குமென்றும் அவைதாம் உயிரேறுங்காற் புள்ளி யிழந்து நிற்குமென்றுங் கூறினார்; ஈண்டு மெய்முதல் மெய்யீறெனப் பொருளுரைக்க வேண்டியமையின் மொழிமுதன் மெய்களும் புள்ளி பெறுமோ வென்று ஐயுற்ற ஐயம் அகற்றக் கூறினாரென்று உணர்க. மரம் எனப் புள்ளிபெற்றுநின்றது அரிதென வந்துழி மரமரிதென்று ஏறி முடிந்தவாறு காண்க. |
(2) |
105. | 1குற்றிய லுகரமு மற்றென மொழிப. |
|
இது முன்னர்ப் புள்ளியீற்றுமுன் உயிர் தனித் தியலாதென்றது மெய்க்கு எய்துவிக்கின்ற கருவியை எதிரது போற்றி உயிர்க்கும் எய்துவிக்கின்ற கருவிச் சூத்திரம். |
இதன் பொருள்: குற்றியலுகரமும் அற்றெனமொழிப - ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்குமென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
இம்மாட்டேறு ஒருபுடைச் சேறல் புள்ளி பெறாமையின். அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரம் கெட்டுப்போக நின்ற |
|
1. இச் சூத்திரத்திற்குக் குற்றியலுகரமும் புள்ளிபெறாத உயிரேற இடங்கொடுக்குமென்று இளம்பூரணர் பொருள்கூறினர். நச்சினார்க்கினியரும் அங்ஙனமே கூறினார். அற்று என்பது முதற் சூத்திரத்திற் கூறிய புள்ளிபெறுதலையே சுட்டுமன்றி அதிற் கூறாத உயிரேற இடங்கொடுக்குமென்பதைச் சுட்டாது. ஆதலின் அவ்வுரைகள் மாட்டேற்றிலக்கணத்தோடு பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. முன்னும், 'மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்' என மெய்கள் புள்ளிபெறுதலை விதித்த ஆசிரியர், அம் மெய்கள் போலவே எகர ஒகரமும் புள்ளிபெறுமெனப் புள்ளிபெறுதலோடு மாட்டி, 'எகர ஒகரத் தியற்கையு மற்றே' எனக் கூறுதலி னாசிரியர் கூறும் மாட்டினிலக்கணம் இஃதென்பது உணரத்தக்கது. பேராசிரியர்க்கும் சிவஞானமுனிவர்க்கும் சங்க யாப்பென்னும் நூலுடையார்க்கும் குற்றியலுகரமும் புள்ளிபெறுமென்பது கருத்தாதல் நூன்மரபு உ - ம் சூத்திரக் குறிப்பில் உணர்த்தப்பட்டது. ஆங்குக் காண்க. |