இத்  தொல்காப்பிய   மொன்றே   முன்னோரால்  எமக்குக்  கிடைத்த
மிகப்   பழையதொரு   நிதியாம்.   இதன்கண்   சில   சூத்திரங்களுக்குக்
கடைச்சங்க  நூல்களிற்கூட உதாரண மில்லாமையை நோக்கும்போது இதன்
பழைமை   எத்துணை   என்பதை  நாம்  அறிந்துகொள்ளலாம்.  பன்னிரு
படலத்துள்  ஒரு படலமும் இவராற் செய்யப்பட்ட தென்பர். இவரைப்பற்றிய
பழைய   உண்மைச்  சரிதங்கள்  கிடையாமையால்  இஃது  மிகச்  சுருக்கி
எழுதப்பட்டது என்க.