ஒற்றின்மேல்   உயிரேறிற்றென்று  கொள்ளற்க.  நாகரிதென்புழி  முன்னர்க் குற்றுகரவோசையும்  பின்னர்   உயிரோசையும்   பெற்று   அவ்விரண்டுங் கூடிநின்றல்லது அப்பொருளுணர்த்த லாகாமையின், இஃது உயிரோடுங் கூடி நிற்குமென்றார்.     | 
(3)   | 
106.  | உயிர்மெய் யீறு 1முயிரீற் றியற்றே. | 
|   | 
இது   'மெய்யே    யுயிரென்    றாயீ   ரியல'   (எழு - 103)  என்ற உயிர்க்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றியது ;  உயிர்மெய்யென்பதோர்  ஈறு உண்டேனும்    அது      புணர்க்கப்படாது,       அதுவும்   உயிராயே அடங்குமென்றலின்.    | 
இதன் பொருள்:   உயிர்மெய்யீறும்  -  உயிர்மெய்    மொழியினது ஈற்றின்கண் நின்றதும், உயிரீற்றியற்றே - உயிரீற்றின்  இயல்பை   யுடைத்து என்றவாறு.    | 
உம்மையான்  இடைநின்ற   உயிர்மெய்யும்    உயிரீற்றின்   இயல்பை யுடைத்து  என்றாராயிற்று.  உம்மை  எச்சவும்மை  ஈற்றினும்  இடையினும் நின்றன   உயிருள்    அடங்குமெனவே   முதல்   நின்றன    மெய்யுள் அடங்குமென்றார்.    இதனானே        மேல்விள      என்றாற்போலும் உயிர்மெய்களெல்லாம் அகரவீறென்று புணர்க்குமாறு உணர்க. வரகு இதனை மேல் உயிர்த் தொடர் மொழி யென்ப. முன்னர் 'மெய்யின் வழியது' (எழு - 18) என்றது ஓரெழுத்திற்கென்று  உணர்க.  இத்துணையும்  மொழி  மரபின் ஒழிபு கூறிற்று.    | 
(4)    | 
107.  | உயிரிறு சொன்மு னுயிர்வரு வழியு முயிரிறு சொன்முன் மெய்வரு வழியு மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியு மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குங் காலை  நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் றாயீ ரியல புணர்நிலைச் சுட்டே. | 
  | 
1. இச்  சூத்திரத்து  உயிரீற்றியற்றே  என   விதித்தமையானும்  இதற்கு முதற்சூத்திரத்துக் குற்றியலுகரமும்  மெய்யீறுபோலப்  புள்ளி  பெறுமென்று விதித்தாரென்றே துணியப்படுதல் காண்க.   |