பில்லனவும் புணர்ச்சி பெற்றாற்போல நிற்குமென்பதூஉம் உணர்த்துகின்றது. |
இதன் பொருள்: மரு மொழியும் - இருவகையாகி மருவிய சொற்களும், இன்றொகுதி மயங்கியன் மொழியும் - செவிக்கினிதாகச் சொற்றிரளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் ஒட்டினாற்போலநின்று பொருளுணர்த்தாது பிரிந்து பின்னர்ச் சென்று ஒட்டிப் பொருளுணர்த்த மயங்குதல் இயன்ற சொற்களும், புணர்நிலைச் சுட்டு உரியவை உள - புணரும் நிலைமைக் கருத்தின்கண் உரியன உள என்றவாறு. |
மொழியுமென்பதனை மருவென்பதனோடுங் கூட்டுக. இன்றொகுதியென்றார், பாவென்னும் உறுப்பு நிகழப் பொருளாட்டாமற் சான்றோர் சொற்களைச் சேர்த்தலின். |
உதாரணம் : முன்றில் மீகண் இவை இலக்கணத்தோடு பொருந்திய மரு. இலக்கணம் அல்லா மரு 'வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்' (எழு - 483) என்புழிக் காட்டுதும். இனி, |
'இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப' |
|
என்புழி மருப்பினிரலையென்று ஒட்டி இரண்டாவதன் தொகையாய்ப் பொருடந்து 'புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலா' (எழு - 138) என்று உயிரேறி முடிந்து மயங்கி நின்றது. ஆயின், மருப்பிற்பரலென்று மெய் பிறிதாய் ஒட்டி நின்றவாறென்னையெனின் மருப்பினையுடைய பரலென வேற்றுமைத்தொகைப்பொருள் உணர்த்தாமையின் அஃது அச் செய்யுட்கு இன்னோசை நிகழ்த்தற்குப் பகரத்தின் முன்னர் நின்ற னகரம் றகரமாய்த் திரிந்துநின்ற துணையேயாய்ப் புணர்ச்சிப் பயனின்றி நின்றது. இங்ஙனம் புணர்ச்சி யெய்தினாற்போல மாட்டிலக்கணத்தின்கண்ணும் மொழிமாற்றின்கண்ணும் நிற்றல் சொற்கு இயல்பென்றற்கு அன்றே ஆசிரியர் இன்றொகுதியென்றதென்று உணர்க. 'கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினை' என்புழி ஓமைச்சினையென்று ஒட்டி ஓமையினது சினையெனப் பொருள் தருகின்றது, இன்னோசை தருதற்குக் ககரவொற்று மிக்குக் காண்பினென்பதனோடும் ஒட்டினாற் |