யெச்சமும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், உவமைத்தொகையும் உம்மைத்தொகையும் இருபெயரொட்டுப பண்புத்தொகையும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், அன்மொழித்தொகை பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், பண்புத்தொகையும் வினைத்தொகையும் விரிந்து நின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியுமென உணர்க. |
(10) |
113. | ஐஒடு குஇன் அதுகண் ணென்னு மவ்வா றென்ப வேற்றுமை யுருபே. |
|
இது மேல்வேற்றுமையெனப்பட்ட அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. |
இதன் பொருள் : வேற்றுமையுருபு - முற்கூறிய வேற்றுமைச் சொற்களை, ஐ ஒடு கு இன் அது கண் என்னும் அவ்வாறென்ப - ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும் அவ்வாறு உருபுமென்று சொல்வர் ஆசிரியர் என்றவாறு. |
1மேற் சொல்லதிகாரத்து எழுவாயையும் விளியையுங் கூட்டி வேற்றுமை எட்டென்பாராலெனின் ஐ முதலிய வேற்றுமையாறுந் தொக்கும் விரிந்தும் பெரும்பான்மையும் புலம்பட்டுநின்று பெயர்ப்பொருளைச் செயப்படுபொருள் முதலியனவாக வேறுபாடுசெய்து புணர்ச்சி யெய்துவிக்குமென்றற்கு ஈண்டு ஆறென்றார். ஆண்டு 2எழுவாயும் விளியுஞ் செயப்படுபொருள் முதலியவற்றினின்றுந் தம்மை வேறுபடுத்துப் பொருள் மாத்திரம் உணர்த்திநின்றும் விளியாய் எதிர்முகமாக்கிநின்றும் இங்ஙனஞ் சிறுபான்மையாய்ப் புலப்படநில்லா வேறுபாடு உடையவேனும் அவையும் ஒருவாற்றான் வேற்றுமையாயின வென்றற்கு ஆண்டு எட்டென்றாரென உணர்க. |
(11) |
|
1. பொருள் நோக்கி ஆண்டு எட்டு என்றார். வருமொழியாய் நின்று புணரும் உருபுநோக்கி ஈண்டு ஆறு என்றார் என்க. |
2. எழுவாய் பொருள்மாத்திரமுணர்த்திநின்றும், விளி எதிர் முகமாக்கி நின்றும் என நிரனிறையாகக் கொள்க. |