114. | வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் கொல்வழியொற்றிடை மிகுதல் வேண்டும். |
|
இது நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது. |
இதன் பொருள்: வல்லெழுத்து முதலிய வேற்றுமையுருபிற்கு - வல்லெழுத்து அடியாய்நின்ற நான்காவதற்கும் ஏழாவதற்கும், ஒல்வழி ஒற்று இடைமிகுதல் வேண்டும் - பொருந்தியவழி வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் மிக்குப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. |
வரையாது ஒற்றெனவே வல்லொற்றும் மெல்லொற்றும் பெற்றாம். |
உதாரணம்: மணிக்கு மணிக்கண் தீக்கு தீக்கண் மனைக்கு மனைக்கண் எனவும், வேய்க்கு வேய்க்கண் ஊர்க்கு ஊர்க்கண் பூழ்க்கு பூழ்க்கண் எனவும், உயிரீறு மூன்றினும் புள்ளியீறு மூன்றினும் பெரும்பான்மை வல்லொற்று மிக்குவரும். தங்கண் நங்கண் நுங்கண் எங்கண் என மெல்லொற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழி மகரக்கேடு 1உருபியலிற் கூறுப. 2ஆங்கண் ஈங்கண் ஊங்கண் என்பன, சுட்டெழுத்து நீண்டு நின்றன. இவற்றிற்கு ஒற்றுக்கேடு கூறுதற்கு ஒற்றின்று. |
இனி நான்கனுருபிற்கு மெல்லொற்று மிகாதென்று உணர்க. |
இனி ஒல்வழியென்பதனான் ஏழாமுருபின்கண் நம்பிகண் என இகர ஈற்றின்கண்ணும் நங்கைகண் என ஐகார ஈற்றின் கண்ணுந் தாய்கண் என யகர ஈற்றின்கண்ணும் அரசர்கண் என ரகர ஈற்றின்கண்ணும் ஒற்று மிகாமை கொள்க. |
இனி மெய் பிறிதாதலை முன்னே கூறாது மிகுதலை முற்கூறிய அதனானே பொற்கு பொற்கண் வேற்கு வேற்கண் |
|
1. உருபியலிற் கூறுபவென்றது, உருபியல் 16 - ம் சூத்திரத்திற் கூறுப என்றபடி. இதில் மெய்யென்பதனாற் பிறவயின் மெய்யும் கெடுக்க எனக் கூறுதல் காண்க. |
2. அங்கண் இங்கண் உங்கண் என்பன ஆங்கண் ஈங்கண் ஊங்கண் என நீண்டு நின்றன என்றபடி. உயிரே நிலைமொழியாதலின் ஒற்று இன்று என்றார். |