இனி முன்னரென்றதனானே 1மாவிற்கும் இவ்வாறே கொள்க. மானை மாவினை மானொடு மாவினொடு மாற்கு மாவிற்கு என ஒட்டுக. ஆகார ஈறென்னாது ஆவினிறுதியென்று ஓதினமையின் மா இலேசினாற் கொள்ளப்பட்டது. |
இனி ஆன்கோடு ஆவின்கோடு மான்கோடு மாவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழியுங் கொள்க. |
121. | அளவாகு மொழிமுத னிலைஇய வுயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. |
| |
இஃது அவ்வின்சாரியை ஈறுதிரியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: அளவாகும் மொழி - அளவுப்பெயராய்ப் பின்னிற்கும் மொழிக்கு, முதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் - முன்னர்நின்ற எண்ணுப்பெயர்களின் ஈற்றுநின்ற குற்றுகரத்தின் மேல் வந்த இன்சாரியையது னகரம், றஃகானாகிய நிலைத்து - றகரமாய்த் திரியும் நிலைமையையுடைத்து என்றவாறு. |
உதாரணம் : பதிற்றகல் பதிற்றுழக்கு. இவற்றைப் பத்தென நிறுத்தி 'நிறையு மளவும்' (எழு - 436) என்னுஞ் சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்துக் 'குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே' (எழு - 433) என்றதனாற் குற்றுகரம் மெய்யோடுங் கெடுத்து 2வேண்டுஞ்செய்கைசெய்து 'முற்றவின் வரூஉம்' (எழு - 433) என்பதனான் ஒற்றிரட்டித்து. முடிக்க. |
நிலைஇய என்றதனாற் 3பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. பதிற்றெழுத்து பதிற்றடுக்கு ஒன்பதிற்றெழுத்து பதிற்றொன்று பதிற்றிரண்டு பதிற்றொன்பது என |
|
1. ஆகாரவீறாயின் மாவுங் கொள்ளப்படும். இங்கே ஆவினிறுதி என்று ஆவையே கூறினமையின் மாஇலேசினாற் கொள்ளப்பட்டது. இதனை ஒப்பக் கூறல் என்னும் உத்தியால் ஆவும் மாவும் என்பர் பேராசிரியர். ஆன் என்பதில் னகரம் சாரியை யென்பர் நன்னூலார். |
2. வேண்டும் செய்கை என்றது, மெய்யில் உயிரேற்றி முடிப்பதை. பதிற்றகல் என்பதில் இற்ற சாரியையென்பர் நன்னூலர். |
3. பிறவழி - அளவாகு மொழிமுதலல்லாத வழி. |