130புணரியல்

எல்லாவற்றோடும்  ஒட்டிக்கொள்க.  அச்  சூத்திரத்திற்  'குறையா  தாகும்'
(எழு - 436) என்றதனாற் பொருட் பெயர்க்கும்  எண்ணுப்பெயர்க்கும் இன்
கொடுக்க.
 

(19)
 

122.

வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்மு
னஃகா னிற்ற லாகிய பண்பே. 
 

இது வற்றுமுதல் திரியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்:   சுட்டுமுதல்     ஐம்முன்   -   சுட்டெழுத்தினை
முதலாகவுடைய  ஐகார  ஈற்றுச்சொன்முன்  வற்று  வருங்காலை,  வஃகான்
மெய்கெட  அஃகான்  நிற்றலாகிய  பண்பு  -  அவ்வற்றுச்  சாரியையினது
வகரமாகிய  ஒற்றுக்  கெட  ஆண்டு  ஏறிய  அகரம் நிற்றல் அதற்கு உள
தாகிய குணம் என்றவாறு.
 

உதாரணம் : அவையற்றை   இவையற்றை   உவையற்றை  எனவரும்.
இன்னும்  இவற்றை,  அவை இவை உவை என நிறுத்திச் 'சுட்டுமுத லாகிய
வையெ  னிறுதி'  (எழு - 177)  என்றதனான்  வற்றும்  உருபுங் கொடுத்து
வேண்டுஞ்  செய்கை  செய்க.  இவ்வாறே   எல்லா  உருபிற்கும்  ஒட்டுக.
அவையற்றுக்கோடு என உருபிற்குச்  சென்ற  சாரியை  பொருட்கட் சென்ற
வழியுங் கொள்க.
 

ஆகியபண்பு    என்றதனானே    1எவனென்பது   படுத்தலோசையாற்
பெயராயவழி   எவன்   என    நிறுத்தி   வற்றும்   உருபுங்  கொடுத்து
வற்றுமிசையொற்றென்று  னகரங்கெடுத்து  அகரவுயிர்   முன்னர்  வற்றின்
வகரங் கெடுமெனக் கெடுத்து எவற்றை எவற்றொடு என முடிக்க.
 

(20)
 

123.

னஃகான் றஃகா னான்க னுருபிற்கு.
 

இஃது  இன்  ஒன் ஆன் அன்னென்னும் னகர ஈறு நான்குந் திரியுமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள்: னஃகான்  நான்கனுருபிற்கு  றஃகான் - னகார ஈற்று
நான்கு  சாரியையின்   னகரமும்  நான்காமுருபிற்கு  றகாரமாய்த்  திரியும்
என்றவாறு.


1. எவன் என்பது எடுத்தலோசையாற் கூறின் வினாவினைக் குறிப்பாகும்.
படுத்தலோசையாற்கூறின்  வினாப்பெயராம்  என்றபடி.  வற்றுச்சாரியையை
அற்றுச்சாரியையென்பர் நன்னூலார்.