புணரியல்133

128.

எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
1யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகர முற்றத் தோன்றாது. 
 

இஃது அக்கு முதல் ஒழிய ஏனைய கெடுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்:    எப்பெயர்    முன்னரும்   -   எவ்வகைப்பட்ட
பெயர்ச்சொன்  முன்னரும்,   வல்லெழுத்து    வருவழி  -  வல்லெழுத்து
வருமொழியாய்   வருமிடத்து,    அக்கின்      இறுதிக்    குற்றியலுகரம்
முற்றத்தோன்றாது - இடை நின்ற அக்குச்   சாரியையின்   இறுதி   நின்ற
குற்றியலுகரம்   முடியத்     தோன்றாது,    மெய்ம்மிசையொடுங்கெடும் -
அக்குற்றுகரம்   ஏறி    நின்ற    வல்லொற்றுத்   தனக்கு    மேல்நின்ற
வல்லொற்றோடுங் கெடும் என்றவாறு.
 

'ஒற்றுநிலை  திரியா தக்கொடு   வரூஉம்'  (எழு - 418)   என்றதனான்
அக்குப்பெற்ற 2குன்றக்கூகை  மன்றப்பெண்ணை  என்பனவும்,  'வேற்றுமை
யாயி   னேனை   யிரண்டும்'  (எழு - 329)  என்பதனான்  அக்குப்பெற்ற
ஈமக்குடம்  கம்மக்குடம்  என்பனவும்,  'தமிழென்  கிளவியும்' (எழு - 385)
என்பதனான்   அக்குப்பெற்ற   தமிழக்கூத்து    என்பதுவும்  அக்கு  ஈறு
கெட்டவாறு    காண்க.     இங்ஙனம்    வருதலின்   எப்பெயரென்றார்.
முற்றவென்பதனான் வன்கணமன்றி  ஏனையவற்றிற்கும்  இவ்விதி  கொள்க.
தமிழநூல் தமிழயாழ் தமிழவரையர் என


1. அக்கினிறுதி   மெய்ம்மிசையொடும்   என்பதற்கு    இறுதி   மெய்
(உகரம்  ஏறிநின்ற  மெய்)   தன்மேலுள்ள    ககரவொற்றோடும்   கெடும்
என்று பொருள்கொள்ளல் சிறப்பாம். இதற்கு மெய்  எழுவாயாய்  நிற்றலின்
மெய்மிசையொடுங்கெடும் என்று பாடமிருத்தல் வேண்டும். ககரவொற்றிலேறி
நின்ற குற்றியலுகரமும் கெடும் என்றவாறு.
 

2. குன்றக்கூகை   என்புழி,      அக்குமெய்ம்மிசையொடுங்   கெடாது,
அக்கிலுள்ள  ககரவொற்று  நிற்குமென்றால்  என்னையெனின்?  அங்ஙனங்
கொள்ளின்  கசதப   முதன்மொழி    வருங்கால்     ககரத்துக்    கன்றி
ஏனையவற்றிற்குப்   பொருந்தாமையின்     வல்லினம்     மிகுமென்றலே
பொருத்தமாமென்க.