வரும். இன்னும் இதனானே தமக்கேற்ற இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடித்துக் கொள்க. அன்றிக் கேடோதிய ககரவொற்று நிற்குமெனின், சகரந் தகரம் பகரம் வந்த வற்றிற்குக் ககரவொற்றாகாமை உணர்க. |
(26) |
129. | அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ஙஞந வாகும். |
|
இஃது அம் ஈறு திரியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: அம்மின் இறுதி - அம்முச்சாரியையின் இறுதியாகிய மகரவொற்று, கசதக்காலை - கசதக்கள் வருமொழியாய் வருங்காலத்து, தன்மெய் திரிந்து ஙஞந ஆகும் - தன் வடிவு திரிந்து ஙஞநக்களாம் என்றவாறு. |
உதாரணம் : புளியங்கோடு செதிள் தோல் எனவரும். |
இது 'புளிமரக் கிளவிக்கு' (எழு - 244) என்பதனான் அம்முப்பெற்றது. கசதக்காலைத் திரியுமெனவே பகரத்தின் கண் திரிபின்றாயிற்று. மெய்திரிந்தென்னாது தன்மெய் என்றதனான் அம்மின் மகரமேயன்றி தம் நம் நும் உம் என்னுஞ் சாரியை மகரமுந் திரிதல்கொள்க. எல்லார் தங்கையும், எல்லார் நங்கையும், எல்லீர்நுங்கையும், வானவரிவில்லுந்திங்களும் எனவரும். துறைகேழூரன் வளங்கேழூரன் எனக் கெழுவென்னுஞ் சாரியையது உகரக்கேடும் எகர நீட்சியுஞ் செய்யுண்முடிபென்று கொள்க. |
(27) |
130. | மென்மையு மிடைமையும் வரூஉம் காலை யின்மை வேண்டு மென்மனார் புலவர். |
|
இஃது அம்மீறு இயல்புகணத்து முன்னர்க் கெடுமென்கின்றது. |
இதன் பொருள்: மென்மையும் இடைமையும் வரூஉங் காலை - மென்கணமும் இடைக்கணமும் வருமொழியாய் வருங்காலத்து, 1இன்மை வேண்டும் என்மனார் புலவர் - அம்முச் |
|
1. இன்மை வேண்டும் என்றது, இறுதி கெடுதல் வேண்டும் என்றபடி. |