உதாரணம்: விளவினைக்குறைத்தான், கூழிற்குக் குற்றேவல் செய்யும்; இவை பிரிந்திசைத்து உருபுநிலை பெற்றன. 'அன்னென் சாரியை' (எழு - 194) என்பதனைக் 'குற்றிய லுகரத் திறுதி' (எழு - 195) என்பதனைச் சேரவைத்தத்தனால் இன்சாரியை வருதல் கொள்க. இவ்விரண்டுருபுஞ் சாரியைநிற்பப் பெரும்பான்மையுந் தொகாவென்று உணர்க. விளவினைக் குறைத்தவன், கடிசூத்திரத்திற்குப் பொன் ; இவை ஒருங்கிசைப்ப உருபு நிலை பெற்றன. வானத்தின்வழுக்கி, வானத்து வழுக்கி எனச் சாரியைபெற்றுப் பிரிந்திசைத்து ஐந்தாமுருபு நிலைபெற்றும் நிலைபெறாதும் வந்தது. வானத்தின்வழுக்கல், வானத்து வழுக்கல் ; இவை 'மெல்லெழுத் துறழும்' (எழு - 312) என்னுஞ் சூத்திரத்து 'வழக்கத்தான' என்பதனான் அத்துக்கொடுத்து மகரங்கெடுக்க ஒருங்கிசைத்தன. விளவி னதுகோடு, விளவின்கோடு என ஒருங்கிசைத்துச் சாரியை பெற்றவழி ஆறனுருபு தொகாதுந் தொக்கும் நின்றது. இதற்கு பிரிந்திசைத்தலின்று. மரத்துக்கட் கட்டினான், மரத்துக்கட்டினான் எனப் பிரிந்திசைத்த வழியும், மரத்துக்கட்குரங்கு, மரத்துக்குரங்கு என ஒருங்கிசைத்த வழியுஞ் சாரியை நின்றவழி ஏழனுருபு தொகாதுந் தொக்கும் நின்றது. 'கிளைப்பெய ரெல்லாம்' (எழு - 307) என்றதனுட் 'கொள' என்றதனான் ணகாரம் டகாரமாயிற்று. 'நிலாவென் கிளவியத்தொடு சிவணும்' (எழு - 228) என விதித்த அத்து நிலாக்கதிர், நிலாமுற்றம் என்றவழிப் பெறாதாயிற்று. அஃது 'ஒட்டுதற் கொழுகிய வழக்கு' அன்மையின், நிலாத்துக் கொண்டான், நிலாத்துக்கொண்டவன் என்பன உருபு தொக்குழி இருவழியும் பெற்றன. 1எல்லார் தம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின் இடைநிற்றல் பெரும் |