140புணரியல்

இஃது  அவற்றுட்  சிலசாரியை  சிலவெழுத்தோடு வாராவென எய்தியது
விலக்கிற்று.
 

இதன் பொருள்:  அவற்றுள் -   முற்கூறியவற்றுள்,  கரமுங்  கானும்
நெட்டெழுத்தில் -  கரமுங்   கானும்    நெட்டெழுத்திற்கு   வருதலின்று
என்றவாறு.
 

எனவே,   நெட்டெழுத்திற்குக்   காரம் வருமாயிற்று. ஆகாரம் ஈகாரம்
என ஒட்டுக. ஐகாரம் ஒளகாரமெனச் சூத்திரங்களுள் வருமாறு காண்க.
 

(33)
 

136.

வரன் முறைமூன்றுங் குற்றெழுத்துடைய.
 

இஃது ஐயம் அகற்றியது ;   என்னை ? நெட்டெழுத்திற்குச் சிலசாரியை
விலக்கினாற்போலக்    குற்றெழுத்திற்கும்  விலக்கற்பாடு   உண்டோவென
ஐயம் நிகழ்தலின்.
 

இதன் பொருள்:     வரன்முறை       மூன்றும்    -   1வரலாற்று
 முறைமையையுடைய       மூன்றுசாரியையும்,       குற்றெழுத்துடைய -
குற்றெழுத்துப்பெற்று வருதலையுடைய என்றவாறு.
 

அகாரம் அகரம்  மஃகான் என ஒட்டுக. 'வகாரமிசையும்' 'அகர இகரம்'
'வஃகான்  மெய்கெட'    எனவும்    பிறவுஞ்    சூத்திரங்களுட்  காண்க.
இஃகான்   ஒஃகான்  என்பன  பெருவழக்கன்று. வரன்முறை யென்றதனான்
அஃகான்   என்புழி   ஆய்தல்  பெறுதல் கொள்க. இது 'குறியதன் முன்ன
ராய்தப்  புள்ளி'  (எழு - 38)   என்பதனாற்  பெறாதாயிற்று,  மொழியாய்
நில்லாமையின்.
 

(34)
 

137.

ஐகார ஒளகாரங் கானொடுந் தோன்றும்.
 

இஃது 'அவற்றுட் கரமுங் கானும்' என்பதற்கோர் புறனடை கூறுகின்றது.
 

இதன் பொருள்: ஐகார   ஒளகாரங்     கானொடுந்    தோன்றும் -
நெட்டெழுத்துக்களுள்   ஐகார    ஒளகாரங்கள்   முன்    விலக்கப்பட்ட
கானொடுந் தோன்றும் என்றவாறு.
 

ஐகான்  ஒளகான் என வரும். உம்மை இறந்ததுதழீஇ யிற்று, காரத்தைக்
கருதுதலின்.
  

(35)


1. வரலாற்றுமுறைமை - வழங்கிவந்தமுறைமை.