உதாரணம் : பாலரிது பாலாழி ஆலிலை பொருளீட்டம் வானுலகு வானூடு வேலெறிந்தான் வேலேற்றான் பொருளையம் பொருளொன்று நாணோடிற்று சொல்லௌவியம் என வரும். |
ஒன்றென முடித்த லென்பதான் இயல்பல்லாத புள்ளி முன்னர் உயிர்வந்தாலும் இவ் விதி கொள்க. அதனை அதனொடு நாடுரி என வரும். இவற்றைச் 'சுட்டுமுத லுகர மன்னொடு' (எழு - 176) 'உரிவரு காலை நாழிக் கிளவி' (எழு - 240) என்பனவற்றான் முடிக்க. புள்ளியீற்று முன்னுமென உம்மையை மாறி எச்ச வும்மையாக்கிக் குற்றியலுகரத்தின் முன்னரும் என அவ் விதி கொள்க. எனவே, 'குற்றிய லுகரமு மற்று' (எழு - 105) என்றதனோடும் பொருந்திற்றாம். நாகரிது வரகரிது என வரும். |
(36) |
139. | 1மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும். |
|
இஃது உயிர்மெய் புணர்ச்சிக்கண் உயிர்நீங்கியவழிப்படுவதோர் விதி கூறுகின்றது. |
இதன் பொருள்: மெய் உயிர் நீங்கின் - மெய் தன்னோடு கூடிநின்ற உயிர் புணர்ச்சியிடத்துப் பிரித்து வேறு நின்றதாயின், தன் உருவாகும் - தான் முன்னர்ப் பெற்று நின்ற புள்ளிவடிவு பெறும் என்றவாறு, |
ஆல் இலை, அதன் ஐ என வரும். |
உயிர் என்ன வடிவிற்றென்று ஆசிரியர் கூறாமையின் உயிர்க்கண் ஆராய்ச்சியின்று. |
இனி எகர ஒகரங்களைப் புள்ளியான் வேற்றுமை செய்தலின் தொன்றுதொட்டு வழங்கின வடிவுடையவென்று கோடலுமாம். புணர்ச்சியுள் உயிர்மெய்யினைப் பிரிப்பாராதலின் இது கூறாக்காற் குன்றக்கூறலாமென்று உணர்க. |
(37) |
140. | எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே யுடம்படுமெய்யி னுருவுகொளல்வரையார். |
|
1. மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும் என்று மெய்யீற்றிற்கே கூறினாராயினும், குற்றியலுகரத்திற்கும் ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும். |