முற்பதிப்புக்களில் விளக்கப்படாத மேற்கோள்விளக்கம்
 

6 - ம் சூ.

"தூஉஉத்தீம்புகைத் தொல்விசும்பு"

(மலைபடு. இறுதி- வெண்பா)

"இலா அர்க்கில்லைத்தமர்"(நாலடியார் - 283)

"விராஅ அய்ச்செய்யாமை நன்று"(நாலடி - 246)

"மரீஇஇப் பின்னைப்பிரிவு"(நாலடி - 220)

40 - ம் சூ.

"கண்ண்டண் ணெனக் கண்டுங் கேட்டும்"

(மலைபடுக - 352)

50 - ம் சூ.

"குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற்புரவி"(அகம்-4)

51 - ம் சூ.

"அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்"
(கலித் - 103)

"சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தித்
திசையறி மீகானும் போன்ம்"

(பரி - 10-55)

57 - ம் சூ.

"கௌவை நீர்வேலிகூற்று"(வெண்பா - IV. - 23)

64 - ம் சூ.

"ஞமலிதந்த மனவுச்சூலுடும்பு"(பெரும்பாண் - 132)

111 - ம் சூ.

"இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய விரலை தெறிப்ப"

(அகம் - 4)

"கருங்காலோ மைக்காண்பின் பெருஞ்சினை"(அகம்-3)
"தெய்வமால்வரைத் திருமுனியருளால்"
(சிலப் - 3 - காதை)

119 - ம் சூ.

"எடுத்த நறவின் குலையலங் காந்தள்"(கலி - 40)

131 - ம் சூ.

"அகடு சேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது"
(மலைபடு - 33)

140 - ம் சூ.

"ஏ எ யிவளொருத்தி பேடியோ"(சீவக - 652)

157 - ம் சூ.

"மழவ ரோட்டிய"(அகம் - 1)
"வனீரவாழ் வருடை"(மலை - 503)

176 - ம் சூ.

"கண்ணாரக் காணக் கதவு"(முத்தொள் - 42)

180 - ம் சூ.

"ஒன்றாகநின்ற கோவினை யடர்க்கவந்த"(சிந்தா - )

191 - ம் சூ.

"எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை "(குறள் - 582)

246 - ம் சூ.

"வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்"

(பட்டின - 85)

"கணவிர மாலை யிடூஉக் கழிந்தன்ன"(அகம் - 31)