தொகைமரபு145

5. தொகை மரபு
 

143.

கசதப முதலிய மொழிமேற் றோன்று
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்
ஙஞநம வென்னு மொற்றா கும்மே
யன்ன மரபின் மொழிவயி னான. 
 

என்பது சூத்திரம்.
 

உயரீறும்   புள்ளியீறும்   மேலை   அகத்தோத்தினுள்   முடிக்கும்வழி
ஈறுகடோறும்   விரித்து     முடிப்பனவற்றை     ஈண்டு    ஒரோவோர்
சூத்திரங்களாற்   றொகுத்து   முடிபு   கூறினமையின்,   இவ்   வோத்துத்
தொகைமர   பென்னும்   பெயர்த்தாயிற்று.   மேல்   மூவகை  மொழியும்
நால்வகையாற்    புணர்வுழி,     மூன்றுதிரிபும்     ஓரியல்பும்     எய்தி
வேற்றுமை  அல்வழியென  இருபகுதியவாகி எழுத்துஞ் சாரியையும் மிக்குப்
புணருமாறு     இதுவென்று       உணர்த்தி      அவைதாம்   விரிந்த
சூத்திரப்பொருளவன்றியுந்    தொக்குப்       புணருமாறு     கூறுதலின்,
இவ்வோத்துப் புணரியலோடு  இயைபுடைத்தாயிற்று.  இத்  தலைச்சூத்திரம்
உயிர் மயங்கியலையும் புள்ளி மயங்கியலையும் நோக்கியதோர் வருமொழிக்
கருவி கூறுகின்றது.
 

இதன் பொருள்: 1கசதப   முதலிய   மொழிமேற்றோன்றும் இயற்கை
மெல்லெழுத்து  -  உயிரீறும்     புள்ளியீறும்       முன்னர்     நிற்பக்
கசதபக்களை முதலாகவுடைய மொழிகள்  வந்தால்   அவற்றிற்கு   மேலே
தோன்றிநிற்கும் இயல்பாகிய மெல்லெழுத்துக்கள் யாவையெனின், சொல்லிய
முறையான்  ஙஞநம  என்னும்  ஒற்றாகும் -  நெடுங்கணக்கிற்  பொருந்தக்
கூறிய முறையானே கசதபக்களுக்கு ஙஞநம வென்னும்


1. கசதப    முதலிய   மொழிமேற்றோன்றும்    மெல்லெழுத்தென்றது,
விள+கோடு   என்பன   புணருங்கால்   வருமொழிக்    ககரம்   நோக்கி
விளங்கோடு என மெல்லெழுத்து மிகுதற்கேயன்றி, மரம்   குறிது   என்பன
புணருங்கால் ககரம்   முதலிய   நோக்கி   மெல்லெழுத்துத்   திரிதற்கும்
விதி   என்க.    இச்   சூத்திரத்தின்   கருத்து   உயிரீற்றின்முன்  கசதப
வருங்கால் அவ்வவற்றின் இனம் மிகும் என்பதும் நிலைமொழி  யீற்றிலுள்ள
மெல்லெழுத்துக்கள் அந் நான்கும் வருங்கால் அவ்வவ்  வினமாகத் திரியும்
என்பதுமே.