இதன் பொருள்: ஞநமயவ எனும் முதலாகு மொழியும் - ஞநமயவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்குஞ் சொற்களும், உயிர்முதலாகிய மொழியும் உளப்பட - உயிரெழுத்து முதலாய்நின்ற சொற்களுந் தம்மிற்கூட, அன்றியனைத்தும் - அப்பதினேழாகிய வருமொழிகளும், எல்லாவழியும் - வேற்றுமையும் அல்வழியுமாகிய எல்லா இடத்தும், நின்றசொன்முன் - இருபத்துநான்கு ஈற்றவாய்நின்ற பெயர்ச்சொன்முன்னர், இயல்பாகும் - திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் என்றவாறு. |