இதன் பொருள்: ஆவயினான - அல்வழிக்கண் அங்ஙனந் திரியாது நின்ற அவ்வொற்றுக்கள், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யிடத்தும், வல்லெழுத் தல் வழி மேற்கூறியற்கை - வல்லெழுத்தல்லாத இடத்து மேற் கூறிய இயல்பு முடிபாம் என்றவாறு. |
எனவே, வல்லெழுத்து வந்துழித் திரியுமென்றாராயிற்று. |
உதாரணம் : மண் பொன் என நிறுத்தி, ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை நுந்தையது அழகு ஆக்கம் இன்மை என ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. இதுவுஞ் 1செய்கைச் சூத்திரம். மேல் நான்கு சூத்திரத்தாற் கூறியன வல்லெழுத்து வந்துழித் திரியுமாறு தத்தம் ஈற்றுட் கூறுப. |
(6) |
149. | லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் தநவென வரிற் றனவா கும்மே. |
|
இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுகின்றது. |
இதன் பொருள்: ல ன என வரூஉம் புள்ளிமுன்னர் - லகார னகாரமென்று சொல்லவருகின்ற புள்ளிகளின் முன்னர், த ந என வரின் - தகாரமும் நகாரமும் முதலென்று சொல்லும்படியாகச் சில சொற்கள் வரின், றனவாகும் - நிரனிறையானே அவை றகார னகாரங்களாகத் திரியும் என்றவாறு. |
உதாரணம் : கஃறீது கன்னன்று பொன்றீது பொன்னன்று என வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. |
(7) |
150. | ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். |
| |
இதுவும் அது. |
இதன் பொருள்: ணளவென் புள்ளிமுன் - ணகார ளகார மென்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர் அதிகாரத்தால் தகார நகாரங்கள் வருமெனின், டணவெனத் தோன்றும் - அவை நிரனிறையானே டகார ணகாரங்களாத் திரிந்து தோன்றும் என்றவாறு. |
|
1. செய்கை - புணர்ச்சி ; கருவிச் சூத்திரமன்று என்றபடி. |