152. | ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும் ஞநமவ வென்னும் புள்ளி யிறுதியுங் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. |
|
இஃது எய்தியது விலக்கிற்று, முற்கூறியவற்றுட் சில ஆகாதனவற்றை வரைந்து உணர்த்தலின். |
இதன் பொருள்: ஒளவென வரூஉம் உயிரிறு சொல்லும் - ஒளவென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞநமவ என்னும் புள்ளியிறுதியும் - ஞநமவ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச் சொல்லும், குற்றியலுகரத்து இறுதியும் - குற்றியலுகரத்தை இறுதியிலேயுடைய சொல்லும், முன்னிலை மொழிக்கு உளப்பட முற்றத் தோன்றா - முன்னர் முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியுமாகிய முடிபிற்கு முற்றத் தோன்றா என்றவாறு. |
முற்றவென்றதனான் நிலைமொழி உகரம்பெற்று உறழ்ந்து முடிதல் கொள்க. |
உதாரணம் : கௌவுகொற்றா கௌவுக்கொற்றா, வௌவுகொற்றா வௌவுக்கொற்றா, உரிஞுகொற்றா உரிஞுக்கொற்றா, பொருநுகொற்றா பொருநுக்கொற்றா, திருமுகொற்றா திருமுக்கொற்றா, தெவ்வுகொற்றா தெவ்வுக்கொற்றா, 1கூட்டுக்கொற்றா கூட்டுக்கொற்றா என வரும். |
(10) |
153. | உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி யுயர்திணைப் பெயரு மெல்லா வழியு மியல்பென மொழிப. |
|
இஃது உயர்திணைப்பெயர் வன்கணம் மென்கணம் இடைக்கணம் உயிர்க்கண மென்னும் நான்கு கணத்தினும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: உயிரீறாகிய உயர்திணைப்பெயரும் - உயிரீறாய் வந்த உயர்திணைப் பெயர்களும், புள்ளியிறுதி உயர்திணைப் பெயரும் - புள்ளியீற்றினையுடைய உயர்திணைப் |
|
1. குற்றியலுகரத்திறுதி. |