தொகைமரபு159

157.

சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலுஞ்
சாரியை யியற்கை யுறழத் தோன்றலு
முயர்திணை மருங்கி னொழியாது வருதலு
மஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலு
மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலு
மன்ன பிறவுந் தன்னியன் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கு
மைகார வேற்றுமைத் திரிபென மொழிப.
 

இஃது இரண்டாம் வேற்றுமைத் 1திரிபு தொகுத்து உணர்த்துகின்றது.
 

இதன் பொருள்: மெல்லெழுத்து மிகுவழி  வலிப்பொடு தோன்றலும் -
'மரப்பெயர்க்     கிளவி      மெல்லெழுத்து     மிகுமே'   (எழு - 217)
என்றதனான்    விளங்குறைத்தானென      மெல்லெழுத்து   மிகுமிடத்து
விளக்குறைத்தானென   வல்லெழுத்துத்     தோன்றுதலும்,   வல்லெழுத்து
மிகுவழி    மெலிப்பொடு   தோன்றலும் -   'மகர விறுதி'   (எழு - 310)
என்பதனான்   மரக்குறைத்தான்     என     வல்லெழுத்து   மிகுமிடத்து
மரங்குறைத்தான்   என   மெல்லெழுத்துத்     தோன்றுதலும்,   இயற்கை
மருங்கின்   மிகற்கை    தோன்றலும்   -     'தாயென்   கிளவியியற்கை
யாகும்'   (எழு - 358)   என்ற   வழித்   தாய்கொலை   என இயல்பாய்
வருமிடத்துத் தாய்க்கொலை என மிகுதி  தோன்றலும்,  உயிர்மிக  வருவழி
உயிர்கெட   வருதலும்  -  'குறியதன் முன்னரும்'  (எழு - 226)  எனவுங்
'குற்றெழுத் திம்பரும்' (எழு - 267) எனவும் 'ஏயெ னிறுதிக்கு' (எழு - 277)
எனவுங்   கூறியவற்றான்  உயிர்மிக்கு   வருமிடத்துப்   பலாக்குறைத்தான்
கழுக்கொணர்ந்தான் ஏக்கட்டினான்  என  உயிர்கெட  வருதலும்,  சாரியை
உள்வழிச்  சாரியை   கெடுதலும் -  'வண்டும்   பெண்டும்'  (எழு - 420)
என்பதனாற் சாரியைப்பேறு உள்ள  இடத்து  வண்டு கொணர்ந்தான் எனச்
சாரியை கெட்டு நிற்றலும்,  சாரியை  உள்வழித்  தன்னுருபு  நிலையலும் -
'வண்டும் பெண்டும்'    என்பதனாற்   சாரியைப்பேறு   உள்ள   இடத்து
வண்டினைக் கொணர்ந்தான் எனத்


1. திரிபு - விகாரம்.