முடிபுகடாம், இயல்பாகுநவும் - இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்து மிகுநவும் - வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும் - உறழ்ச்சியாய் முடிவனவும், என்மனார் புலவர் - என இவையென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : பருத்திகுறிது காரைகுறிது சிறிது தீது பெரிது என இவை இயல்பு. மாசித்திங்கள் சித்திரைத்திங்கள் அலிக்கொற்றன் புலைக்கொற்றன் காவிக்கண் குவளைக்கண் என இவை மிகுதி. கிளிகுறிது கிளிக்குறிது தினைகுறிது திகைக்குறிது என இவை உறழ்ச்சி. |
பெயர்க்கிளவி மூவகைநிலைய வெனவே பெயரல்லாத 1இரண்டீற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இயல்பும் மிகுதியுமாகிய இருவகை நிலையவாம். ஒல்லைக் கொண்டான் என்பது ஐகார ஈற்று வினைச்சொன்மிகுதி. 'இனியணி' (எழு - 236) யென்பதன்கண் இகர ஈற்று வினையெச்சம் எடுத்தோதுப. இவற்றிற்கு இயல்புவந்துழிக் காண்க. 'சென்மதிபாக' இஃது இகர ஈற்று இடைச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. 'தில்லைச் சொல்லே' இஃது ஐகார ஈற்று இடைச்சொன் மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. 'கடிகா' இஃது இகர ஈற்று உரிச்சொல்லியல்பு மிகுதி வந்துழிக் காண்க. பணைத்தோள் இஃது ஐகார ஈற்று உரிச்சொன் மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. |
(16) |
159. | சுட்டுமுத லாகிய விகர விறுதியு மெகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் யாவென் வினாவி னையெ னிறுதியும் வல்லெழுத்து மிகுநவு முறழா குநவுஞ் சொல்லியன் மருங்கி னுளவென மொழிப. |
|
இஃது ஏழாம்வேற்றுமை இடப்பொருளுணர்த்தி நின்ற இகர ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்: சொல்லியல் மருங்கின் - இகர ஐகாரங்கட்கு முன்னர்க் கூறிய மூவகை யிலக்கணங்களுள் இயல்பை |
|
1. இரண்டீற - இ, ஐ. |