வும் ஒற்றுநிற்றலுங் கொள்க. இனி அறிய என்றதனாற் தேன்றீது நாண்டீது என்றாற்போல்வன கெடாமைநிற்றலுங், கெடுதலுங் தகரநகரங்கள் வந்துழியென்பதூஉங் கொள்க. நெறியியலென்றதனாற் சுட்டின்முன் உயிர்முதன்மொழி வந்துழி அவ்வடை அவ்வாடை என இடை வகரவொற்று இல்வழியும் இரட்டுதல் கொள்க. |
(18) |
161. | ஆற னுருபினு நான்க னுருபினுங் கூறிய குற்றொற் றிரட்ட லில்லை யீறாகு புள்ளி யகரமொடு நிலையு நெடுமுதல் குறுகு மொழிமுன் னான. |
|
இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுகின்றது. |
இதன் பொருள்: நெடுமுதல் குறுகும் மொழிமுன் ஆன - நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் அறுவகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த, ஆறனுருபினும் நான்கனுருபினும் - ஆறாம் வேற்றுமைக்கண்ணும் நான்காம் வேற்றுமைக்கண்ணும், கூறிய குற்றொற்று இரட்டலில்லை - முன்னர் நிலைமொழிக்கு இரட்டுமென்ற குற்றொற்று இரட்டி வருதலில்லை, ஈறாகு புள்ளி அகரமொடுநிலையும் - நிலைமொழியீற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம்பெற்று நிற்கும் என்றவாறு. |
உருபியலில் 'நீயெ னொருபெயர்' (எழு - 179) எனவுந் 'தாம் நா மென்னும்' (எழு - 188) எனவும், 'தான் யா னென்னும்' (எழு - 192) எனவுங் கூறியவற்றாற் குறுகி ஒற்றிரட்டித் தம்மை நம்மை எம்மை தன்னை நின்னை என்னை என வருவன இதனானே தமது நமது எமது தனது நினது எனது எனவும், தமக்கு நமக்கு எமக்கு தனக்கு நினக்கு எனக்கு எனவும் ஒற்றிரட்டாது அகரம்பெற்று வந்தன. நான்காவதற்கு ஒற்றுமிகுதல் 'வல்லெழுத்து முதலிய' (எழு - 114) என்பதனாற் கொள்க. ஆறனுருபாகிய அகரம் ஏறிமுடியாமைக்கு காரணம் 'ஆற னுருபி னகரக் கிளவி' (எழு - 115) என்புழிக் கூறினாம். ஒற்றிரட்டாமையும் அகரப்பேறும் |