166தொகைமரபு

1இரண்டற்கும் ஒத்தவிதியென்று  உணர்க.  கூறியவென்றதனான் நெடுமுதல்
குறுகாத  தம்  நம்  நும்  என  வரும்  சாரியைகட்கும்  இவ்விரு விதியுங்
கொள்க. எல்லார்தமக்கும்
 

எல்லா நமக்கும்  எல்லீர்   நுமக்கும்   எல்லார்தமதும்  எல்லாநமதும்
எல்லீர்நுமதும் என வரும்.
 

(19)
 

162.

நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது.
 

இது     நெடுமுதல்      குறுகாத     நும்மென்கின்றதும்   அவ்விதி
பெறுமென்கின்றது.
 

இதன் பொருள்;  நும்மென்    இறுதியும்   -  நெடுமுதல்   குறுகா
நும்மென்னும்  மகரவீறும்,  அந்நிலை  திரியாது  - முற்கூறிய  குற்றொற்று
இரட்டாமையும் ஈறாகு புள்ளி அகரமொடு நிலையலும் எய்தும் என்றவாறு.
 

உதாரணம் : நுமது நுமக்கு என வரும்
 

(20)
 

163.

உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமு முயிரும் வருவழி யியற்கை.

 

இது  புள்ளிமயங்கியலை   நோக்கியதோர்   நிலைமொழிச்   செய்கை
கூறுகின்றது.
 

இதன் பொருள்: உகரமொடு     புணரும்       புள்ளி    யிறுதி -
உகரப்பேற்றோடு  புணரும்  புள்ளியீறுகள்,  யகரமும்   உயிரும்  வருவழி
இயற்கை - யகரமும் உயிரும்   வருமொழியாய்   வருமிடத்து  அவ்வுகரம்
பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு.
 

அவ்வீறுகளாவன புள்ளிமயங்கியலுள் உகரம்பெறுமென்று விதிக்கும் பல
ஈறுகளுமென்று  கொள்க.  உரிஞ்  யானா அனந்தா  ஆதா இகலா  ஈந்தா
உழுந்தா  ஊரா  எயினா  ஏறா  ஐயா  ஒழுக்கா  ஓதா ஒளவியா எனவும்,
உரிஞ்யாது  அழகு  எனவும்  ஒட்டுக.  ஏனைப்  புள்ளிகளோடும்  ஏற்பன
அறிந்து ஒட்டுக.
 

'ஞகாரை யொற்றிய'  (எழு - 296) என்பதனானும் 'ஞநமவ வியையினும்'
(எழு - 297) என்பதனானும்  யகரமும்  உயிரும்  வந்தால்  உகரம்பெறாது
இயல்பாமென்பது 


1. இரண்டற்கும் - ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும்