இதன் பொருள்: கலமென் அளவே - கலமென்னும் அளவுப்பெயர் குறையோடு புணருமிடத்து, அத்துஇடை வரூஉம் - அத்துச் சாரியை இடைவந்து புணரும் என்றவாறு. |
கலத்துக்குறை. இதனை 'அத்தே வற்றே' (எழு - 133) என்பதனான் முடிக்க. இதற்குக் கலமுங் குறையுமென்பது பொருள். சாரியை முற்கூறியவதனானே, முன் இன்சாரியை பெற்றவழி வல்லெழுத்து வீழ்க்க. |
(26) |
169. | பனையெ னளவுங் காவெ னிறையு நினையுங் காலை யின்னொடு சிவணும். |
|
இதுவும் அது, வேற்றுமைவிதி விலக்கி இன் வகுத்தலின். |
இதன் பொருள்: பனையென் அளவுங் காவென் நிறையும் - பனையென்னும் அளவுப்பெயருங் காவென்னும் நிறைய்பெயருங் குறையென்பதனோடு புணருமிடத்து, நினையுங்காலை இன்னொடு சிவணும் - ஆராயுங்காலத்து இன்சாரியை பெற்றுப் புணரும் என்றவாறு. |
1பனையின்குறை காவின்குறை என வரும். இவையும் உம்மைத்தொகை. நினையுங்காலை யென்பதனான் வேற்றுமைக்கு உரிய விதியெய்தி வல்லெழுத்துப் பெறுதலுஞ் சிறுபான்மை கொள்க. பனைக்குறை காக்குறை என வரும். |
இத்துணையும் அல்வழிமுடிபு. இவற்றை 'வேற்றுமையல்வழி இஐ' (எழு - 158) என்னுஞ் சூத்திரத்திற் கூறாது வேறோதினார், இவை அளவும் நிறையும் எண்ணுமாதலின். |
(27) |
170. | அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி யுளவெனப்பட்ட வொன்பதிற்றெழுத்தே யவைதாங் கசதப வென்றா நமவ வென்றா வகர வுகரமோ டவையென மொழிப. |
|
இது முற்கூறிய மூன்றனுள் அளவிற்கும் நிறைக்கும் மொழிக்கு முதலாமெழுத்து இனைத்தென்கின்றது. |
இதன் பொருள்: அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி உளவெனப்பட்ட ஒன்பதிற்றெழுத்தே - அளவுப் |
|
1. இன்னும் ஒரு பனைப் பொழுது நிற்கிறது என்பதனான் பனை அளவுப்பெயராதல் பெறப்படும். |