தொகைமரபு171

பெயர்க்கும்    நிறைப்பெயர்க்கும்      மொழிக்கு    முதலாயுள்ளவென்று
கூறப்பட்டன ஒன்பதெழுத்துக்கள், அவைதாங் கசதப  என்றா நமவ என்றா
அகரவுகரமோடு   அவையென  மொழிப  -   அவ்வெழுத்துக்கள்   தாங்
கசதபக்களும்   நமவக்களும்   அகர உகரமுமாகிய அவையென்று கூறுவர்
புலவர் என்றவாறு.
 

உதாரணம் : கலம் சாடி தூதை பானை நாழி  மண்டை  வட்டி  அகல்
உழக்கு இவை அளவு. கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மா வரை அந்தை
இவை  நிறை.  நிறைக்கு   உகர   முதற்பெயர்   வந்துழிக்  காண்க. இனி
உளவெனப்பட்ட   என்றதனானே   உளவெனப்படா தனவும்  உள. அவை
இம்மி  ஓரெடை  இடா  என   வரையறை கூறாதனவுங் கொள்க. இன்னும்
இதனானே தேய  வழக்காய்  ஒருஞார்  ஒருதுவலி  என்பனவுங்  கொள்க.
1இங்ஙனம்   வரையறை  கூறினார்.   அகத்தோத்தினுள்   முடிபுகூறியவழி
அதிகாரத்தான்   வன்கணத்தின்மேற்     செல்லாது   ஒழிந்தகணத்தினுஞ்
செல்லுமென்றற்கு. எண்ணுப் பெயர் வரையறையின்மையிற் கூறாராயினார்.
  

(28)
 

171.

ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லா
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
யொத்தவை யுரிய புணர்மொழி நிலையே. 
 

இஃது   இவ்வோத்திற்குப்   புறனடை;  எடுத்தோத்தானும் இலேசானும்
முடியாதனவற்றிற்கு இதுவே ஓத்தாகலின்.
 

இதன் பொருள்: ஈறு  இயல்     மருங்கின் - உயிரும்    புள்ளியும்
இறுதியாகிய சொற்கள் வருமொழியோடு கூடி  நடக்கு   மிடத்து,   இவற்று
இயல்பு இவையெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் - இம் மொழிகளின்
முடிபு   இவையெனக்கூறி   முடிக்கப்பட்ட   சொற்களினது  அவ்வாற்றான்
முடியாதுநின்ற பலவகை முடிபுகளெல்லாம், மெய்த்தலைப்பட்ட வழக்கொடு


1. இங்ஙனம்  வரையறை  கூறினார் அகத்தோத்தினுள் முடிவு கூறியவழி
அதிகாரத்தான்  வன்கணத்தின்மேற்   செல்லாது   ஒழிந்த   கணத்தினுஞ்
செல்லுமென்றற்கு   என்பதற்கு, "அளவும் நிறையும்" என எடுத்துக் கூறுஞ்
சூத்திரங்களுள்,    வன்கணத்தின்     மாத்திரம்   செல்லாமல்   ஏனைய
கணத்தினும் அச் சூத்திரவிதி செல்லுமென்றற்கு என்பது கருத்து.