சிவணி - உண்மையைத் தலைப்பட்ட வழக்கோடு கூடி, புணர்மொழிநிலை ஒத்தவை உரிய - புணரும் மொழிகளின் நிலைமைக்கட் பொருந்தினவை உரியவாம் என்றவாறு. |
உதாரணம் : நடஞெள்ளா என உயிரீறாகிய முன்னிலைக்கிளவி மென்கணத்தோடு இயல்பாய் முடிந்தது. மண்ணுகொற்றா மண்ணுக்கொற்றா மன்னுகொற்றா மன்னுக்கொற்றா உள்ளுகொற்றா உள்ளுக்கொற்றா கொல்லுகொற்றா கொல்லுக்கொற்றா என்பன புள்ளியிறுதி முன்னிலைக்கிளவி உகரம்பெற்றும் உறழ்ந்தும் முடிந்தன. உரிஞுஞெள்ளா இஃது 'ஒளவென வரூஉம்' (எழு - 152) என்பதன் ஒழிபு. பதக்க நானாழி பதக்கமுந்நாளி என இவை ஏயென்சாரியை பெறாது அக்குப்பெற்று அதன் இறுதி மெய்ம்மிசையொடுங் கெட்டுப் புணர்ந்தன. வாட்டானை தோற்றண்டை என்பன தகரம் வந்துழித் திரிந்து நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடாது நின்றன. சீரகரை என்பதனைச் சீரகம் அரை யென நிறுத்திக் ககரவொற்றின் மேலேறின அகரத்தையும் மகரவொற்றையுங் கெடுத்து அரையென்பதன் அகரத்தையேற்றி முடிக்க. இது நிறைப்பெயர். ஒருமாவரை யென்பதனை ஒருமா அரையென நிறுத்தி வருமொழி அகரங்கெடுத்து ஒரு மாரை என முடிக்க. கலவரை யென்பதனைக் கலரை என முடிக்க. 1அகர மகரங் கெடுத்து நாகணை யெனப் பிறவும் வருவன வெல்லாம் இச் சூத்திரத்தான் முடிக்க. |
(29) |
172. | பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வகரங் கெடுதலு மேனை யொன்றறி சொன்முன் யாதென் வினாவிடை யொன்றிய வகரம் வருதலு மிரண்டு மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே. |
|
இது மரூஉச்சொன் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்: பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வகரங் கெடுதலும் - பலரை யறியும் அவரென்னுஞ் சொல்லின் முன்னர் வருகின்ற யாவரென்னும் பெயர் இடையில் வகரங் கெடுதலும், ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினா இடையொன்றிய வகரம் வருதலும் - ஒழிந்த |
|
1. நாகம் என்பதன் அகரமகரங் கெடுத்து என்க. |