174. | பல்லவை நுதலிய வகர விறுபெயர் வற்றொடு சிவண லெச்ச மின்றே. |
|
இஃது இன் சாரியை விலக்கி வற்று வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. |
இதன் பொருள்: பல்லவை நுதலிய பெயரிறு அகரம் - பன்மைப்பொருளைக் கருதின பெயர்களின் இறுதி நின்ற அகரம், வற்றொடு சிவணல் எச்சமின்று - வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதலில்லை என்றவாறு. |
உதாரணம் : பல்லவற்றை பல்லவற்றொடு பலவற்றை பலவற்றொடு சில்லவற்றை சில்லவற்றொடு சிலவற்றை சிலவற்றொடு உள்ளவற்றை உள்ளவற்றொடு இல்லவற்றை இல்லவற்றொடு என ஒட்டுக. |
எச்சமின்றி என்றதனானே 1மேல் இன் பெற்றன பிறசாரியையும் பெறுதல் கொள்க. நிலாத்தை துலாத்தை மகத்தை என வரும். இன்னும் இதனானே பல்லவை நுதலியவற்றின் கண் முன்றாமுருபு வற்றுப்பெற்றே முடிதல் கொள்க. |
(2) |
175. | யாவென் வினாவு மாயிய றிரியாது. |
|
இஃது ஆகார ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள்: யாவென் வினாவும் - யாவென்று சொல்லப்படும் ஆகார ஈற்று வினாப்பெயரும், ஆயியல் திரியாது - முற்கூறிய வற்றுப்பேற்றிற் றிரியாது என்றவாறு. |
யாவற்றை யாவற்றொடு என வரும். |
(3) |
176. | சுட்டுமுத லுகர மன்னொடு சிவணி யொட்டிய மெய்யொழித் துகரங்கெடுமே. |
|
இஃது உகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள்: சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச்சொல் |
|
1. மேல் என்றது உருபியல் 1 - ஞ் சூத்திரத்தை. |