178உருபியல்

குறுகி இகரமாம், ஆவயின் னகரம் ஒற்றாகும்  - அவ்விடத்துவரும்  னகரம்
ஒற்றாய் நிற்கும் என்றவாறு.
 

உதாரணம் : நின்னை நின்னொடு   நினக்கு   எனச்  செய்கையறிந்து
ஒட்டுக. நினக்கு என்பதற்கு 'ஆற னுருபினு  நான்கனுருபினும்' (எழு - 161)
'வல்லெழுத்து  முதலிய'    (எழு - 114)   என்பன  கொணர்ந்து  முடிக்க.
நினதென்பதற்கு  'ஆறனுருபி  னகரக்  கிளவி'  (எழு - 115)  என்பதனான்
முடிக்க. நின்னென்பது வேறொரு பெயரோ எனக் கருதுதலை  விலக்குதற்கு
ஒருபெயரென்றார்.  பெயர்   குறுகுமென்னாது    முதல்    குறுகுமென்றத
அப்பெயரின்  1எழுத்தின்கண்ணது   குறுக்கமென்றற்கு   நெடுமுதலெனவே
நகரங்குறுகுதலை  விலக்கிற்று.   2உயிர்மெய்   யொற்றுமைபற்றி  நெடியது
முதலாயிற்று. 'உடைமையு மின்மையு  மொடுவயி  னொக்கும்'  (எழு - 132)
என்றதனை நோக்கி  ஒடுவிடத்துச்  சாரியைபெற்றே  வந்த  அதிகாரத்தை
மாற்றுதற்குச் சாரியைப் பேற்றிடை 3எழுத்துப்பேறு கூறினார்.
 

(7)
 

180.

ஓகார விறுதிக் கொன்னே சாரியை.
 

இஃது ஓகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது.
 

இதன் பொருள்: ஒகார இறுதிக்கு ஒன்னே சாரியை - ஓகார ஈற்றிற்கு
இடைவருஞ்சாரியை ஒன்சாரியை என்றவாறு.
 

கோஒனை கோஒனொடு  என   ஒட்டுக.   ஒன்னேயென்ற ஏகாரத்தாற்
பெரும்பான்மையாக வருஞ் சாரியை ஒன்னே,  சிறுபான்மை   இன்சாரியை
வருமென்று கொள்க.   'ஒன்றாகநின்றகோவினை   யடர்க்கவந்த'  எனவும்,
கோவினை கோவினொடு சோவினை  சோவினொடு  ஓவினை  ஓவினொடு
எனவும் வரும்.
 

ஓவென்பது மதகுநீர் தாங்கும் பலகை.
 

(8)
 

181.

அ ஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக்
கத்தொடுஞ் சிவணு மேழ னுருபே.

1. எழுத்து என்றது ஈகார உயிரை.
 

2. உயிர்மெய் - நீ.
 

3. எழுத்துப்பேறு என்றது இச் சூத்திரத்தாற் கூறிய னகரத்தை.