உருபியல்179

இஃது அகர ஆகார ஈற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
 

இதன் பொருள்: அ  ஆ   என்னும்     மரப்பெயர்க்  கிளவிக்கு -
அஆவென்று   சொல்லப்படும்   மரத்தை    உணர்த்துகின்ற  பெயராகிய
சொல்லிற்கு,  ஏழனுருபு அத்தொடுஞ் சிவணும் - ஏழாமுருபு இன்னோடன்றி
அத்தோடும் பொருந்தும் என்றவாறு.
 

உதாரணம் : விளவத்துக்கண் பலாவத்துக்கண் எனவரும்.
 

'வல்லெழுத்து முதலிய'  (எழு - 114)    என்பதனான்   வல்லெழுத்துக்
கொடுத்துத்   'தெற்றென் றற்றே'   (எழு - 133)   என்பதனான்   'அத்தி
னகர மகரமுனை' (எழு - 125)க்
 

கெடாமைச் செய்கைசெய்து முடிக்க.
 

(9)
 

182.

ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை.
 

இது புள்ளியீற்றுள் ஞகார ஈறும் நகார ஈறும் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: ஞந என்  புள்ளிக்கு   இன்னே   சாரியை - ஞ ந
வென்று  சொல்லப்படுகின்ற  புள்ளியீறுகட்கு  வருஞ்சாரியை  இன்சாரியை
என்றவாறு.
 

உதாரணம் : உரிஞினை  உரிஞினொடு   பொருநினை பொருநினொடு
என ஒட்டுக.
 

(10)
 

183.

சுட்டுமுதல் வகர மையு மெய்யுங்
கெட்ட விறுதி யியற்றிரி பின்றே.

 

இது நான்குமொழிக்கு  ஈறாம் வகர  ஈற்றுட் சுட்டுமுதல் வகர ஈற்றிற்கு
முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள்: சுட்டுமுதல்   வகரம் - அவ்   இவ் உவ்  என்னுஞ்
சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுச்  சொல்,   ஐயும்   மெய்யுங்
கெட்ட இறுதியியல்   திரிபின்று  -  ஐகாரமும்   ஐகாரத்தான் ஊரப்பட்ட
மெய்யுங் கெட்டு வற்றுப்பெற்று முடிந்த யாவை (எழு - 178) என்னும் ஐகார
ஈற்றுச் சொல் லியல்பில் திரிபின்றி வற்றுப்பெற்று முடியும் என்றவாறு.