உருபியல்183

190.

உயர்திணை யாயி னம்மிடை வருமே,
 

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
 

இதன் பொருள் :உயர்திணையாயின் - எல்லாமென நின்ற மகர ஈற்று
விரவுப்பெயர்    உயர்திணைப்   பெயராமெனின்,    நம்   இடைவரும் -
நம்மென்னுஞ் சாரியை இடைநின்று புணரும் என்றவாறு.
 

மகர   ஈற்றினை  மேல்   வற்றின்மிசை     யொற்றெனக்    கெடுத்த
அதிகாரத்தாற்      கெடுக்க.     1எல்லாநம்மையும்      எல்லாநம்மினும்
எல்லாநங்கணும்       என      உகரம்பெற்றும்      எல்லாநம்மொடும்
எல்லாநமக்கும் எல்லாநமதும்    என   உகரங்  கெட்டும்  மகரம் நிற்கும்.
இவற்றிற்கு  எல்லாரையும்  எல்லாரொடும்  என்பது  பொருளாக  ஒட்டுக.
இதற்கு  நம்முவகுத்ததே  வேறுபாடு.  ஈறாகு  புள்ளி அகரமொடு  நிற்றல்
(எழு - 161) நான்காவதற்கும் ஆறாவதற்குங் கொள்க.
 

(18)
 

191.

எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியு
மெல்லீரு மென்னு முன்னிலை யிறுதியு
மொற்று முகரமுங் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
யும்மை நிலையு மிறுதி யான
தம்மிடை வரூஉம் படர்க்கை மேன
நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே.

 

இது மகர ஈற்று உயர்திணைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் :எல்லாருமென்னும்           படர்க்கையிறுதியும் -
எல்லாருமென்னும்   மகர  ஈற்று   உயர்திணைப்  படர்க்கைப்  பெயரும்,
எல்லீருமென்னும்  முன்னிலையிறுதியும்  -  எல்லீருமென்னும்  மகர  ஈற்று
உயர்திணை முன்னிலைப்பெயரும், ஒற்றும் உகரமுங்  கெடுமென மொழிப -
மகர வொற்றும் அதன்


1. நம்மையும் என்ற   இடத்தில்  உம்மில்  உகரங்  கெடாது   பெற்று
நின்றது.   நம்மொடும்     என்ற    இடத்தில்   உம்மில்   உகரங்கெட்டு
மகரம் நின்றது என்பது கருத்து.