184உருபியல்

முன்னின்ற   உகரமுங்    கெட்டு   முடியுமென்று  சொல்லுவர்   புலவர்,
ரகரப்புள்ளி   நிற்றல்   வேண்டும்  -  அவ்  வுகரம்  ஏறி  நின்ற   ரகர
ஒற்றுக்   கெடாது  நிற்றலை   விரும்பும் ஆசிரியன், இறுதியான  உம்மை
நிலையும்  -  அவ்   விருமொழியி   னிறுதிக்   கண்ணும்  உம்மென்னுஞ்
சாரியை   நிலைபெறும்,   படர்க்கை     மேன   தம்   இடைவரூஉம் -
படர்க்கைச்  சொல்லிடத்துத்   தம்  முச்சாரியை  இடைவரும்,  முன்னிலை
மொழிக்கு  நும்  இடைவரூஉம்  -  முன்னிலைச் சொற்கு நும் முச்சாரியை
இடைவரும் என்றவாறு.
 

உதாரணம் :          எல்லார்தம்மையும்         எல்லார்தம்மினும்
எல்லார்தங்கணும்     என    உகரம்  பெற்றும்,  எல்லார்    தம்மொடும்
எல்லார்  தமக்கும்  எல்லார் தமதும்  என    உகரங்   கெட்டும்,  மகரம்
நிற்கும்.     எல்லீர்நும்மையும்     எல்லீர்நும்மினும்    எல்லீர்நுங்கணும்
என     உகரம்    பெற்றும்,    எல்லீர்நும்மொடும்     எல்லீர்நுமக்கும்
எல்லீர்நுமதும் என உகரங் கெட்டும், மகரம் நிற்கும்.
 

1முன்னர் 'மெய்'  (எழு - 188)  என்ற இலேசாற்  கொண்ட மகரக்கேடு
இவற்றிற்கும் மேல்வருவனவற்றிற்குங் கொள்க.
 

படர்க்கைப்பெயர்   முற்கூறியவதனானே   ரகர  ஈற்றுப்   படர்க்கைப்
பெயரும்  முன்னிலைப்  பெயரும் மகர  ஈற்றுத் தன்மைப்  பெயரும்  தம்
நும்     நம்    என்னுஞ்   சாரியை   இடையே     பெற்று      இறுதி
உம்முச்சாரியையும்பெற்று    முடிவன      கொள்க.    கரியார்தம்மையும்
சான்றார்தம்மையும்          எனவும்,                கரியீர்நும்மையும்
சான்றீர்நும்மையும்   எனவும்,  கரியே  நம்மையும்   இருவே   நம்மையும்
எனவும் எல்லாவுருபொடுஞ்  செய்கையறிந்து   ஒட்டுக.  உகரமும்  ஒற்றும்
என்னாததனான்  இக்  காட்டியவற்றிற்கெல்லாம் மூன்று   உருபின்கண்ணும்
உம்மின்     உகரங்         கெடுதல்     கொள்க.    'நிற்றல்வேண்டும்
ரகரப்புள்ளி'   என்றதனானே   தம்முப்பெறாமை  வருமவையுங்  கொள்க.
'எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை' என வரும்.
 

(19)

1. முன்னர்   'மெய்'   என்றது   16 - ம்   சூத்திரத்துள்  வரும்மெய்
என்பதை.     தங்கண்    என்புழி     தம்    என்ற   நிலைமொழியின்
மகரக்கேட்டுக்கு விதி 'மெய்' என்றது.