188உருபியல்

இதன் பொருள் எண்ணின்   இறுதி   அன்னொடு   சிவணும்   -
எண்ணுப்பெயர்களினது   குற்றுகர  ஈறு  அன்சாரியையோடு  பொருந்தும்
என்றவாறு.
 

உதாரணம் :ஒன்றனை  இரண்டனை  என   எல்லா  எண்ணினையும்
எல்லா  உருபினோடுஞ் செயற்கை  யறிந்து ஒட்டுக. முன்னர்ச் செயற்கைய
என்ற இலேசானே ஒன்றினை இரண்டினை  என இன்சாரியையுங் கொடுக்க.
 

(26)
 

199.

ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉ
மெல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை
யானிடை வரினு மான மில்லை
யஃதென் கிளவி யாவயிற் கெடுமே
யுய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.

 

இஃது   ஒன்று   முதலாக  எட்டு  இறுதியாக  நின்ற  குற்றுகர  ஈற்று
எண்ணுப்பெயர்   ஏழினோடும்   பத்தென்னும்   எண்ணுப்பெயர்   வந்து
புணர்ந்து  ஒன்றாய்  நின்ற  சொற்கள்   சாரியை   பெற்றுத்   திரியுமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் ஒன்று  முதலாகப்  பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா
எண்ணும்   -   ஒன்றுமுதலாக   எட்டீறாக  நின்ற   எண்களின்  மேலே
பத்தென்னும் எண்ணுப்பெயர்  ஏறி  வருகின்ற ஒருபது  முதலான  எல்லா
எண்களையும்,  சொல்லுங்காலை  -  முடிபு  கூறுங்காலத்து, ஆன்  இடை
வரினும்  மானமில்லை - முற்கூறிய  அன்சாரியையேயன்றி   ஆன்சாரியை
இடையே  வரினுங்  குற்றமில்லை, ஆவயின்  அஃதென்  கிளவி கெடும் -
அவ் ஆன் பெற்றுழிப் பஃதென்னும்  எண்ணிடத்து  அஃதென்னுஞ் சொற்
கெட்டுப்போம்,  பஃகான்  மெய்  உய்தல்  வேண்டும் - அவ் அகரத்தான்
ஊரப்பட்ட பகரமாகிய  ஒற்றுக் கெடாது  நிற்றலை  ஆசிரியன்  விரும்பும்
என்றவாறு.
 

'நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம்
வந்திடை நிலையும்'

 

(எழு - 437)
 

என்பதனான் ஆய்தம் பெற்றது.
 

உதாரணம் :ஒருபஃது  இருபஃது  முப்பஃது   நாற்பஃது   ஐம்பஃது
அறுபஃது   எண்பஃது எனக்  குற்றியலுகரப்  புணரியலுள்   விதிக்குமாறே
நிறுத்தி அஃதென்பதனைக் கெடுத்துப்