உருபியல்189

பகரவொற்றை  நிறுத்தி  ஆன்சாரியை  கொடுத்து  ஒருபானை இருபானை
என எல்லா எண்ணொடும் எல்லா  உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக.
உம்மை    எதிர்மறையாதலின்     ஒருபஃதனை    இருபஃதனை    என
எல்லாவற்றோடும் ஒட்டுக.
 

சொல்லுங்காலை  என்றதனாற்  பத்தூர்   கிளவியேயன்றி   1'ஒன்பான்
முதனிலை'  (எழு - 463)   'ஒன்பாற்  கொற்றிடைமிகுமே'  (எழு -  475)
என்றாற்போல    வருவனவற்றின்கண்ணும்   பகரத்துள்    அகரம்பிரித்து
அஃதென்பது கெடுத்து ஆன் கொடுக்க.
 

(27)
 

200.

யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய
வாய்த விறுதியு மன்னொடு சிவணு
மாய்தங் கெடுத லாவயி னான.

 

இஃது  எண்ணுப்பெயரல்லாத  குற்றுகர   ஈற்றுட்  சிலவற்றிற்கு  முடிபு
கூறுகின்றது.
 

இதன் பொருள் :  யாது  என் இறுதியும்  -  யாதென வருங் குற்றுகர
ஈறும், சுட்டுமுதலாகிய ஆய்த இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய
ஆய்தத்   தொடர்மொழிக்   குற்றுகர   ஈறும்,  அன்னொடு   சிவணும் -
அன்சாரியையோடு  பொருந்தும்,  ஆவயின்  ஆன  ஆய்தங்  கெடுதல் -
அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும் என்றவாறு.
 

யாதனை யாதனொடு எனவும், அதனை அதனொடு, இதனை இதனொடு,
உதனை உதனொடு எனவும் வரும்.
 

(28)
 

201.

ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி யியற்கையு மாகு
மாவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே.

 

இதுவுங் குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு ஏழனுருபோடு முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் :  திசைப்பெயர்     முன்னர்    ஏழனுருபிற்கு    -
திசைப்பெயர்களின்  முன்னர்   வந்த  கண்ணென்னும்   உருபிற்கு  முடிபு
கூறுங்கால்,   சாரியைக்   கிளவி    இயற்கையுமாகும்  -   முன்   கூறிய
இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலே


1. 'ஒன்பான்  முதனிலை'  என்பது,   ஒன்பஃது   ஆன்   பெற்றதற்கு
உதாரணம். ஏனையவுமன்ன.